SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

உ.பி.யில் தொடர்ந்து அரங்கேறும் சோகம் : ஆம்புலன்ஸ் வராததால் பாட்டியை கட்டை வண்டியில் மருத்துவமனைக்கு அழைத்து வந்த பேரன்

2018-06-24@ 08:00:25

லக்னோ: உத்தரபிரேசத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஆம்புலன்ஸ் வராததால் பாட்டியை கட்டை வண்டியில் மருத்துவமனைக்கு அழைத்து வந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் பஸ்டி மாவட்டத்தில் உள்ளது கமல்பூர் கிராமம். இங்கு வசிக்கும் சிறுவன் சோட்டு (12) மற்றும் பாட்டி அனரா தேவி (85) ஆகியோர் வசித்து வந்தனர். அனரா தேவிக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து சோட்டு அவரது பாட்டியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார்.

ஆம்புலன்சுக்கு போன் செய்தார். ஆனால் வெகுநேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. நேரம் சென்று கொண்டிருப்பதை உணர்ந்த  சோட்டு, அங்கிருந்த கட்டை வண்டியில் அனரா தேவியை வைத்து அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கூறுகையில், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை டாக்டர்கள் மீது விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார். உத்தரப்பிரதேசத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இது தான் பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியாவ எனவே பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இங்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • amazon_bang_111

    ஆன்லைன் வர்த்தக் நிறுவனமான அமேசானின் சேகரிப்புக் கூடம் பெங்களூருவில் திறப்பு

  • northkorea_southkore

    வட கொரியாவில் முதன்முறையாக தென் கொரியா அதிபர் சுற்றுப் பயணம்

  • americatoday_flood123

    அமெரிக்காவின் கரோலினாவை புரட்டிய ஃபுலோரன்ஸ் புயல்

  • pakistan_vehicls12345

    பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் பயன்படுத்தப்படும் 70 சொசுகு வாகனங்கள் ஏலம்

  • jawa_studentelection123

    ஜேஎன்யூ மாணவர் தேர்தல் - அனைத்திலும் இடதுசாரி மாணவர் அமைப்பினர் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்