SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சூரியனைப்போன்ற நட்சத்திரத்தைச் சுற்றி வரும் துணை சனி கிரகம் போன்ற கோள் கண்டுபிடிப்பு

2018-06-23@ 00:57:48

சென்னை: அகமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சிக் கூடம் (பிஆர்எல்)-ஐ  சேர்ந்த பேராசிரியர் அபிஜித் சக்கரபர்த்தி தலைமையிலான விஞ்ஞானிகள், பொறியாளர்கள் குழுவினர், புதிய கோள் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். சனிக் கிரக பாதைக்கு கீழும், நெப்டியூன் கிரகப் பாதைக்கு மேலும், இருக்கக்கூடிய, அளவு உள்ள, சூரியனைப் போன்ற நட்சத்திரத்தை சுற்றி வரும், இந்த புதிய கோள் புவியின் எடையைப்போல 27 மடங்கு எடையும், பூமியின் ஆரத்தைப்போல 4 மடங்கு பெரிய அளவும் கொண்டது.

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட “ பி ஆர் எல் மேம்படுத்தப்பட்ட  ஆர்-வேக அபு-ஆகாய தேடுதல்” நிற மாலைக் கருவி மவுண்ட் அபுவின் குருஷிகார் வான் ஆய்வு நிலையத்தின் 1.2 மீட்டர் தொலைநோக்கியுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, இந்த கோளின் எடை அளவுகளை எடுத்து, அதன் மூலம் இந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது.  நமது சூரிய குடும்பத்திற்கு அப்பாற்பட்டு நட்சத்திரங்களைச் சுற்றி, கோள்களைக் கண்டுபிடிக்கும் திறனுள்ள ஒருசில நாடுகளுடன் இந்த கண்டுபிடிப்பு காரணமாக இந்தியாவும், இப்போது சேர்ந்துவிட்டது.  பாராஸ் நிற மாலைக் கருவிதான் ஆசியாவிலேயே  முதலாவதாகும். இதுபோன்ற, துல்லியமான அளவீடுகளை தரக்கூடிய வெகு சில நிற மாலை கருவிகளே உலகில் உள்ளன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்