SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுனில் கிருஷ்ணன், சேதுபதி தேர்வு சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு

2018-06-23@ 00:49:45

புதுடெல்லி: சாகித்ய அகாடமி சார்பில் பால சாகித்ய புரஸ்கார், யுவ புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழக எழுத்தாளர்கள் சுனில் கிருஷ்ணன், கிருங்கை சேதுபதியின் படைப்புகள் தேர்வாகி உள்ளன. நாடு முழுவதும் சிறந்த படைப்பாளர்களை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் மற்றும் யுவ புரஸ்கார் விருதுக்கான படைப்பாளிகளின் பெயர்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், தமிழகத்தை சேர்ந்த சுனில் கிருஷ்ணன் யுவ புரஸ்கார் விருதுக்கும், கிருங்கை சேதுபதி பால சாகித்ய புரஸ்கார் விருதுக்கும் தேர்வாகி உள்ளனர்.

‘அம்பு படுக்கை’ என்ற சிறு கதைக்காக சுனில் கிருஷ்ணனும், ‘சிறகு முளைத்த யானை’ என்ற கவிதை தொகுப்புக்காக கிருங்கை சேதுபதியும் விருது பெறுகின்றனர். பால சாகித்ய புரஸ்கார் விருது வரும் நவம்பர் 14ம் தேதி வழங்கப்பட உள்ளது. யுவ புரஸ்கார் விருது வழங்கப்படும் தேதி அறிவிக்கப்படவில்லை. 2 பிரிவுகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் ரூ.50 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்படும். பால சாகித்ய புரஸ்கார் விருதுக்கு 23 பேரும், யுவ புரஸ்கார் விருதுக்கு 21 பேரும் தேர்வாகி உள்ளனர் குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mexico_agath

    மெக்ஸிகோவில் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி தாக்கப்பட்ட அகதிகள்: அமெரிக்காவில் தஞ்சம் அடைய கோரிக்கை

  • qaternationfesti

    கத்தார் நாட்டின் தேசிய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • antar_icemarthn

    அண்டார்க்டிகாவில் நடைபெற்ற சர்வதேச ஐஸ் மாரத்தான் போட்டி: போட்டியாளர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு!

  • 19-12-2018

    19-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்