SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குழந்தைகளை பிரிக்கும் நடவடிக்கை மனைவி எதிர்ப்புக்கு பணிந்தார் டிரம்ப்

2018-06-22@ 01:15:23

வாஷிங்டன்: அமெரிக்கா - மெக்சிகோ எல்லை வழியாக சட்ட   விரோதமாக நுழைபவர்களிடம் இருந்து குழந்தைகளை பிரிப்பதை  நிறுத்தும்படி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறும் பெரியவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கிரிமினல்  வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. அவர்களின் பிள்ளைகள், குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் வைக்கப்பட்டனர். கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் இதுவரை 2 ஆயிரம் 500 குழந்தைகள் இவ்வாறு பிரிக்கப்பட்டனர். இதனால் டிரம்ப் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.  டிரம்ப்பின் மனைவி மெலனியாவும் டிரம்ப்பின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.  

இதையடுத்து, சட்ட விரோதமாக அமெரிக்காவில்  நுழைபவர்களிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் நடவடிக்கையை நிறுத்தும்படி அதிபர் டிரம்ப் நேற்று உத்தரவிட்டார். சட்ட விரோத குடியேறிகள்  மீதான வழக்குகள் முடியும் வரை, அவர்களின் குழந்தைகளை சேர்த்தே வைக்குப்படிஉத்தரவிட்டுள்ளார்.  இது குறித்து டிரம்ப் அளித்த பேட்டியில், ‘‘குடும்பங்கள் பிரிக்கப்பட்டிருக்கும் காட்சியை பார்க்க விரும்பவில்லை. இது அமெரிக்காவில் நீண்ட காலமாக  இருக்கும் பிரச்னை. இதை முந்தைய அரசுகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டன. நாங்கள் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-07-2018

    15-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-07-2018

    14-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • TrumpLondonprotest

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் லண்டன் வருகை: குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக மாபெரும் போராட்டம்

  • Michigancorpseflower

    18 ஆண்டுகளுக்கு பிறகு மிச்சிகனில் பூத்தது துர்நாற்றம் வீசும் பூ

  • Chinachemicalplantfire

    சீனாவில் இரசாயன ஆலையில் தீ விபத்து: 19 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்