SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

தூங்கும்போது சார்ஜ் போட்டதால் விபரீதம் ஸ்மார்ட்போன் வெடித்து மலேசிய அதிகாரி பலி

2018-06-22@ 00:42:26

கோலாலம்பூர்: மலேசியாவில் நிதியமைச்சகத்துக்கு சொந்தமான கிராடில் பண்ட் நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக  இருந்தவர் நசிரின் ஹாசன். இவர் பிளாக் பெர்ரி மற்றும் ஹூவாய் நிறுவனத்தின் செல்போன்களை பயன்படுத்தி வந்தார். இந்நிலையில்  படுக்கையறையில் செல்போன் வெடித்து சிதறிய விபத்தில் நசிரின் ஹாசன் உயிரிழந்துள்ளார்.இது தொடர்பாக அவரது உறவினர் கூறுகையில், “ நசிரின் படுக்கையறையில் செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு படுத்திருந்தார். அப்போது செல்போன்  வெடித்து சிதறியதில் அதன் உலோக துண்டு அவரது பின்தலையை தாக்கியுள்ளது. இதில் அவர் உயிரிழந்துள்ளார். அதன் பின் அவரது படுக்கையில்  தீப்பற்றியுள்ளது. ஆனால் நசிரின் ஏற்கனவே இறந்துவிட்டதால் அவரால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை” என்றார்.

இதனிடையே கிராடில் பண்ட் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நசிரினுக்கு அருகில் சார்ஜ் போடப்பட்டு இருந்த ஸ்மார்ட் போன்  வெடித்து சிதறியதால் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று  குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • amazon_bang_111

    ஆன்லைன் வர்த்தக் நிறுவனமான அமேசானின் சேகரிப்புக் கூடம் பெங்களூருவில் திறப்பு

  • northkorea_southkore

    வட கொரியாவில் முதன்முறையாக தென் கொரியா அதிபர் சுற்றுப் பயணம்

  • americatoday_flood123

    அமெரிக்காவின் கரோலினாவை புரட்டிய ஃபுலோரன்ஸ் புயல்

  • pakistan_vehicls12345

    பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் பயன்படுத்தப்படும் 70 சொசுகு வாகனங்கள் ஏலம்

  • jawa_studentelection123

    ஜேஎன்யூ மாணவர் தேர்தல் - அனைத்திலும் இடதுசாரி மாணவர் அமைப்பினர் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்