SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கடல்நீருக்கு உறைதிறன் குறைவாக இருப்பது ஏன்?

2018-06-20@ 10:24:29

நீரானது தனது வெப்பநிலை இருந்து வெகுவாய் குறையும் போது நீர்மநிலையில் இருந்து திண்மநிலைக்கு உறைந்து உருமாறும். அந்தத்தன்மையே பனி (ஐஸ்) எனப்படுகிறது. இது ஒளிஊடுருவும் தன்மை கொண்டிருக்கும். அதேவேளையில் நீலம் கலந்த வெண்மைநிறத்தில் ஒளிபுகவிடாத தன்மையுடன் இருக்கும். பனியில் உள்ள மாசுக்கள், மண்போன்ற வேறுபொருட்கள் கலக்கும் போது பனியின் தோற்றத்திலும், தன்மையிலும் மாறுதல் ஏற்படுகிறது. பனியானது இயற்கையில் வெவ்வேறு தோற்றங்களில் காணப்படும். மேலிருந்து காற்றுமண்டலத்தில் இருந்து விழும் பஞ்சு போன்ற மென்மையான வெண்பனிகள் பனித்தூவி எனப்படும்.

அதுவே மிகவும் திடநிலையில் சிறு உருண்டைகளாக விழும்போது ஆலங்கட்டி மழை என்று அழைக்கப்படுகிறது. சிந்தும்நீர் கீழே விழாமல் கூரானஈட்டி போன்ற தோற்றத்தை  பெறுகையில் அது பனிக்கூரி எனப்படுகிறது. மிக அதிகளவில் பனி சேர்ந்து நகரக்கூடிய ஆறு போன்ற போன்ற வடிவத்தை பனியாறு என்பர். கடல்நீரானது அதீத உப்பை  கொண்டிருப்பதால் இதன் உறைநிலையானது தூயநீரை விடவும் குறைவாக இருக்கும். நீராவியானது பனித்தூளாக உறைந்த நிலையில் இருப்பதை பனிப்பூச்சு என்கிறோம். மிகப்பெரிய நிலப்பரப்பளவில் பனிகள் படர்ந்திருப்பதை பனிப்படுகை என அழைக்கப்படுகிறது. பல நூறு கிமீ.நிலப்பரப்பு பனியாக மாறிக்கிடப்பதை பனிவிரிப்பு என்பர்.

பனியானது புவியின் காலநிலையை பேணுவதிலும், நீரின் சுழற்சியிலும் மிகமுக்கிய பங்காற்றுகிறது. மேலும் பனிச்சறுக்கு போன்ற குளிர்கால விளையாட்டுக்கள், குளிர்பானங்கள் தயாரிப்பு, பனிச்சிற்பம் செய்யும் கலை போன்ற பல பண்பாட்டு சார்ந்த பயன்களை தருகிறது. கலிபோர்னியா, ரஷ்யா, இங்கிலாந்து போன்ற குளிர்நாடுகளில் பனிப்பொழிவு, பனிப்பஞ்சு விழுதல், ரோடு முழுவதும் ஐஸ்கட்டிகள் நிறைந்து கிடத்தல் என்பது சாதாரண நிகழ்வாக இருக்கிறது. இந்தியா வெப்பமண்டலநாடு என்பதால் கார்த்திகை, மார்கழி பனிக்கே நாம் ஆடிப்போய் விடுகிறோம். நம் பருவநிலை முற்றிலும் மாறுபட்டு இருப்பதால் குளிர்காலத்தில் நிலவும் கடும்பனியையும், எப்போதாவது பெய்யும் ஆலங்கட்டி மழையையும் நாம் கண்டு பிரமித்து பேசும் நிலையில் இருக்கிறோம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • amazon_bang_111

  ஆன்லைன் வர்த்தக் நிறுவனமான அமேசானின் சேகரிப்புக் கூடம் பெங்களூருவில் திறப்பு

 • northkorea_southkore

  வட கொரியாவில் முதன்முறையாக தென் கொரியா அதிபர் சுற்றுப் பயணம்

 • americatoday_flood123

  அமெரிக்காவின் கரோலினாவை புரட்டிய ஃபுலோரன்ஸ் புயல்

 • pakistan_vehicls12345

  பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் பயன்படுத்தப்படும் 70 சொசுகு வாகனங்கள் ஏலம்

 • jawa_studentelection123

  ஜேஎன்யூ மாணவர் தேர்தல் - அனைத்திலும் இடதுசாரி மாணவர் அமைப்பினர் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்