SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீர்வரத்து நின்றுபோனதால் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 94.60 அடியாக நீடிக்கிறது

2018-06-19@ 12:17:12

திருவண்ணாமலை: சாத்தனூர் அணைக்கான நீர்வரத்து நின்றுபோனதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 94.60 அடியாக உள்ளது. தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால், தென்பெண்ணை ஆற்றின் வழியாக நீர்வரத்து ஏற்பட்டது. எனவே, ஓசூர் கெலவரப்பள்ளி அணை முழுமையான கொள்ளளவு நிரம்பியது. மேலும், கிருஷ்ணகிரி அணையின் அதிகபட்ச நீர்மட்ட உயரம் 42 அடி என்றாலும், அணையின் உடைந்துபோன முதல் மதகு ஷெட்டர் சீரமைப்பு நடப்பதால், 37 அடி மட்டும் தண்ணீர் தேக்க முடிந்தது. எனவே, அணையில் இருந்து உபரிநீர் முழுவதும் தென்பெண்ணை வழியாக வெளியேற்றப்பட்டது.

அதனால், கடந்த 2ம் தேதி முதல் தென்பெண்ணை ஆற்றின் வழியாக சாத்தனூர் அணைக்கு உபரிநீர் வந்து கொண்டிருந்தது. கடந்த மூன்று நாட்களாக மழையும், உபரிநீரும் நின்றுவிட்டது. எனவே, சாத்தனூர் அணைக்கான நீர்வரத்து கடந்த 16ம் தேதிக்கு பிறகு தடைப்பட்டுள்ளது. அதனால், அணையின் நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி மொத்த உயரமான 119 அடியில், 94.60 அடியாகவும், கொள்ளளவு 3,011 மில்லியன் கன அடியாகவும் நீடிக்கிறது. சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்ட பிறகு, அணையின் நீர்மட்டம் 80 அடியில் இருந்து 94.60 அடியாக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்