SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

'ஸ்டார்மிங் ஆபரேஷன்' மூலம் சென்னையில் குற்றங்கள் குறைந்துள்ளன : காவல் ஆணையர் விஸ்வநாதன் பேட்டி

2018-06-19@ 10:50:13

சென்னை: சென்னையில் இரவு நேரத்தில் போலீஸார் நடத்தி வரும் வாகன சோதனை மூலம் குற்றங்கள் குறைந்துள்ளதாக மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் கூறியுள்ளார். செயின் பறிப்பு, கொள்ளை, கொலை, பைக் ரேஸ் போன்ற சம்பங்கள் சமீபகாலமாக தலைநகர் சென்னையில் அதிகரித்து வந்த நிலையில், அவற்றை கட்டுப்படுத்தும் விதமாக சுமார் 150 இடங்களில் இந்த வாகன சோதனை கடந்த 8 நாட்களாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகளில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் 7-ம் நாளாக இரவில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் குற்றப்பின்னணியில் உள்ள நபர்கள் உட்பட 611 பேரை போலீசார்  கைது செய்தனர்.

இரவு நேரங்களில் சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் தொடர் வாகன சோதனைகள் நடத்தி வருகின்றனர்.  அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு 7ம் நாள் சோதனையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகள் 2 பேர், தலைமறைவு குற்றவாளிகள் 5  பேரும், சந்தேகத்தின் பேரில் 423 நபர்கள் மற்றும் 109,110 சட்ட பிரிவுகளின் கீழ் 33 பேர், குற்றப்பின்னணியில் கொண்ட நபர்கள் 148 என மொத்தம் 611  பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த 51 பேரை போலீசார் பிடித்தனர். கடந்த 8 நாட்களாக அடையார் , மெரினா , அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.  சோதனை பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட கமிஷனர் விஸ்வநாதன், சென்னையில் நடைபெறும் இந்த ஸ்டார்மிங் ஆபரேஷனால் குற்றச்சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளதாகவும், இன்னும் ஒரு சில நாட்கள் இந்த சோதனை தொடரும் என்றும் கூறினார். தேவைப்பட்டால் இந்த சோதனை பணிகளை நிரந்தரமாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-07-2018

    15-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-07-2018

    14-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • TrumpLondonprotest

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் லண்டன் வருகை: குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக மாபெரும் போராட்டம்

  • Michigancorpseflower

    18 ஆண்டுகளுக்கு பிறகு மிச்சிகனில் பூத்தது துர்நாற்றம் வீசும் பூ

  • Chinachemicalplantfire

    சீனாவில் இரசாயன ஆலையில் தீ விபத்து: 19 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்