SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஷான் மார்ஷ் சதம் வீண்....2-வது ஒருநாள் போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

2018-06-17@ 08:23:42

கார்டிஃப்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி கார்டிஃபில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் குவித்தது. ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் அதிகபட்ச ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க வீரர் ஜேசன் ராய் அதிரடியாக விளையாடி 108 பந்துகளில் 120 ரன்கள் குவித்தார்.   ஜாஸ் பட்லர்  91 ரன்கள் குவித்தார்.

பின்னர் 343 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 47.1 ஓவரில் 304 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது. அந்த அணியின் ஷான் மார்ஷ் அதிரடியாக ஆடி 116 பந்துகளில் 131 ரன்கள் விளாசினார்.  மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் அந்த அணி தோல்வியை தழுவியது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் பிளங்கட் 4 விக்கெட்டுகளையும் ரஷித் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-07-2018

    15-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-07-2018

    14-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • TrumpLondonprotest

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் லண்டன் வருகை: குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக மாபெரும் போராட்டம்

  • Michigancorpseflower

    18 ஆண்டுகளுக்கு பிறகு மிச்சிகனில் பூத்தது துர்நாற்றம் வீசும் பூ

  • Chinachemicalplantfire

    சீனாவில் இரசாயன ஆலையில் தீ விபத்து: 19 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்