SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

யோ-யோ சோதனையில் தோல்வி......இங்கிலாந்து தொடரிலிருந்து ராயுடு நீக்கம்: சுரேஷ் ரெய்னா தேர்வு

2018-06-17@ 07:50:04

டெல்லி: யோ-யோ சோதனையில் தோல்வியடைந்ததால் இங்கிலாந்து கிரிக்கெட் தொடரில் இருந்து நீக்கப்பட்ட அம்பதி ராயுடுவுக்கு பதிலாக சுரேஷ் ரெய்னா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஓவ்வொரு தொடரில் விளையாடுவதற்கு முன்பாகவும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு யோ-யோ சோதனை என்ற உடற்தகுதி சோதனை நடத்தப்படுகிறது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான யோ-யோ சோதனை சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, டோனி, ரெய்னா உள்ளிட்டோர் தேர்ச்சி பெற்றனர். இதன்மூலம், அயர்லாந்து உடனான டி20 போட்டி மற்றும் இங்கிலாந்து உடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்க அவர்கள் தகுதிப்பெற்றனர்.

இந்த சோதனையில், சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி, இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்ற அம்பதி ராயுடு தோல்வியடைந்தார். இதனால் அவர் இங்கிலாந்து தொடரில் விளையாடு இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். ராயுடு சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ராயுடுவுக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் ஜூலை 3-ம் தேதி தொடங்க உள்ளது.
இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள்: விராட் கோலி, ஷிகர் தவான், ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், சுரேஷ் ரெய்னா, எம்.எஸ்.டோனி, தினேஷ் கார்த்திக், சஹால், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thiruvan_5thdaycelb

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

  • rarephots_indiragandhi

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

  • 2018_indiragandibirthdy

    இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

  • america_winterstorm2018

    வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

  • 2018wildfire_trumph

    கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்