SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேலூர் அருகே 3 ஏக்கர் நிலம், வீட்டுமனை அபகரிப்பு: போலி தாய் மூலம் தானம் பெற்ற மகனுக்கு 5 ஆண்டு தண்டனை

2018-06-15@ 01:54:39

வேலூர்: வேலூர் அருகே 3 ஏக்கர் நிலம், வீட்டுமனையை அபகரிப்பதற்காக போலி தாய் மூலம் தான செட்டில்மெண்ட் பெற்ற மகனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், உடந்தையாக இருந்த மனைவி, மாமனாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து வேலூர் கோர்ட் தீர்ப்பளித்தது.
வேலூர் அடுத்த ஊசூர் அருகே உள்ள பெரியசேக்கனூரைச் சேர்ந்தவர் குப்பம்மாள்(65). இவரது மகன் சிவராஜ்(45). செக்யூரிட்டி. இவருக்கும் வசந்தி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இதில் சிவராஜ், அதேபகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டிலேயே வசித்து வருகிறார். சிவராஜ், குப்பம்மாள் பெயரில் அதேபகுதியில் உள்ள 3 ஏக்கர் நிலம், வீட்டுமனையை அபரிக்க போலியாக ஒரு பெண்ணை தனது தாய் என கூறி நிலத்தையும், வீட்டுமனையையும் தான செட்டில்மெண்டாக பெறுவதுபோல் பத்திரப்பதிவு செய்துள்ளார்.

இதற்கு அவரது மனைவி வசந்தி(28), மாமனார் கோபால்(67) உடந்தையாக இருந்துள்ளனர். இந்த தகவல், குப்பம்மாளுக்கு தெரியவந்து, தனது மகனிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் அதற்கு பதில் கூறாமல் தட்டிக்கழித்துள்ளார். இதையடுத்து குப்பம்மாள், வேலூர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் கடந்த 2011ம் ஆண்டு புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு விசாரணை, வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி ஆனந்தி நேற்றுமுன்தினம் விசாரித்து, போலி தாய் மூலம் நிலத்தை அபகரித்த சிவராஜ், உடந்தையாக இருந்த அவரது மனைவி வசந்தி, மாமனார் கோபால் ஆகிய 3 பேருக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தலைமறைவாக உள்ள 3 பேரையும் வேலூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-06-2018

    24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • kmkharippastatue

    சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

  • Stalinarrestvolunteersstirstir

    தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

  • president_kovindh_cuba123

    கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்