SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதியோருக்கு முன்னுரிமை முதல்வர் வலியுறுத்தல்

2018-06-15@ 01:51:25

சென்னை: முதியவரின் களைத்த பாதங்களை தழுவுதல் இளையவர்களின் தலையாய கடமை என்று முதியோருக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின வாழ்த்து செய்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: முதுமை என்பது தவிர்க்க இயலாதது. காலத்தின் நெடிய பாதையில் நாம் அனைவரும் ஒவ்வொரு நொடியும் முதுமையின் திசையை நோக்கியே நகர்ந்து கொண்டு இருக்கின்றோம். முதுமையை மதித்தலே ஆரோக்கியமான சமூகத்தின் அடையாளம். நம்மை சுமந்தவர்களை நாம் சுமப்பது என்பது நமது கடமையாகும்.  முதுமை என்பது இன்னொரு குழந்தை பருவம்.  முதியோர் நம்மிடம் எதிர்பார்ப்பது உண்மையான அன்பையும் பாசத்தையும் மட்டுமே. வாழ்க்கையின் மேடு பள்ளங்களை கடந்து களைத்த பாதங்களை தழுவுதல் இளையவர்களின் தலையாய கடமையாகும்.

ஐநா சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15ஆம் தேதியை முதியோருக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினமாக அனுசரித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசும் இவ்வாண்டு முதல், ஜுன் 15ம் தேதியை முதியோருக்கெதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினமாக அனுசரிக்க உள்ளது
இதற்காக துண்டு பிரசுரங்கள் அச்சடித்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி அரசு அலுவலகங்களில் உறுதிமொழி எடுக்க  வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதில் “முதியோரை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன் எனவும், மனோரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன் எனவும்,  அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன் என்றும் பொது இடங்களான மருத்துவமனை, வங்கி, பேருந்து போன்ற இடங்களில் முதியோருக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கெதிரான கொடுஞ்செயல்கள், வன்முறைகள் எவ்விதத்திலும் இழைக்கப்படுவதனை தடுத்திட பாடுபடுவேன்’’ என உறுதிமொழி எடுக்குமாறு உங்கள் அனைவரையும் உளமார கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-06-2018

  24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • kmkharippastatue

  சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

 • Stalinarrestvolunteersstirstir

  தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

 • president_kovindh_cuba123

  கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

 • RePlantingCanada

  அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்