SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கட்டுப்பாட்டை இழந்த கார் ஜேசிபி மீது மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் பலி

2018-06-15@ 01:51:02

சென்னை: கட்டுப்பாட்டை இழந்த கார் ஜேசிபி மீது மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிராமத்தை சேர்ந்தவர் உடையார்(53). இவர், சென்னை சூளைமேடு பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். தூர்தர்சனில்  உதவி பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மாலை தனது குடும்பத்தினருடன் காரில் சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். முட்டுக்காடு பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்றிருந்த ஜேசிபி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில், உடையார் மாமனார் ராசு(65) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். காரில் இருந்தவர்களை மீட்டு பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே உடையாருடைய பேரன் தர்மேந்திரன்(6) இறந்தான். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடையார்(53), விசாலாட்சி (40), கிஷோர் (10), தனவல்லி(57), ஜனனி(7), சுந்தரி (45) ஆகிய படுகாயமடைந்த 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் இறந்த 2 பேரின் உடலை மீட்பு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_protest123

    நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

  • cleanesttrainPurityIndia

    ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

  • whatsapp_police11

    வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்