SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வடசென்னை அனல் மின்நிலையத்தில் 1200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு: மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

2018-06-15@ 01:50:34

சென்னை: தொழில்நுட்ப கோளாறு மற்றும் கொதிகலனில்  ஏற்பட்ட பழுது காரணமாக வடசென்னை அனல் மின்நிலையத்தில்  1200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் மொத்தம் 2 நிலைகள் உள்ளன. இதில் முதலாவது நிலையில் உள்ள 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதே போல இரண்டாவது நிலையில் உள்ள இரண்டு அலகுகளில் தலா 600 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரண்டாவது நிலையில் உள்ள இரண்டாவது அலகில் தொழில்நுட்ப பிரிவில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தியும், நேற்று இரண்டாவது  நிலையில் உள்ள முதலாவது   அலகில் கொதிகலன் குழாயில் பழுது  ஏற்பட்டு பாதிக்கப்பட்டதால்  600 மெகாவாட் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு மற்றும் கொதிகலனில் ஏற்பட்டுள்ள பழுதினை சரி செய்யும் பணியில் அனல் மின் நிலைய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் விரைவில் அந்த அலகில் மின் உற்பத்தி தொடங்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிகின்றனர். வடசென்னை அனல் மின்நிலையத்தின் மொத்த உற்பத்தித் திறனான 1830 மெகாவாட்டில் தற்போது 1200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை புறநகர் பகுதிகளில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-02-2019

    24-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்