SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

நீரிழிவு, தைராய்டு, நுரையீரல் உள்பட பல நோய்கள் இருந்தால் ஜெயலலிதா உள்பட யாராக இருந்தாலும் காப்பாற்றுவது கடினம்

2018-06-15@ 01:50:08

சென்னை: நீரிழிவு, தைராய்டு, நுரையீரல் உள்பட பல்வேறு நோய்களின் தாக்கம் கடினமாக இருக்கும் நிலையில் ஜெயலலிதா உள்பட எந்த நோயாளியாக இருந்தாலும் காப்பாற்றுவது கடினம் என்று டாக்டரும் திவாகரன் மகளுமான ராஜ் மாதங்கி விசாரணையில் கூறியதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தில் திவாகரன் மருமகனும் அப்போலோ டாக்டருமான விக்ரம், திவாகரன் மகளும் டாக்டருமான ராஜ்மாதங்கி ஆகியோர் நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் ஆஜரானார்கள். அவர்களிடம் ஆணைய வழக்கறிஞர்கள் பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர் விசாரணை நடத்தினர். சுமார் 2 மணிநேரம் நடந்த விசாரணையில் இரண்டு டாக்டர்களும் அளித்த பதில்களை, நீதிபதி வாக்குமூலமாக பதிவு செய்தார். இந்த விசாரணையில் அவர்கள் அளித்த பதில்கள் குறித்து ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது: ஜெயலலிதாவுக்கு கடந்த 2016 அக்டோபர் 7ம் தேதி டிரக்கியோஸ்டமி என்று அழைக்கப்படும் மூச்சுக்குழல் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சை அளித்த டாக்டர் ஆப்ரகாம் தலைமையிலான மருத்துவக்குழுவில் நானும் இடம் பெற்று இருந்தேன் என்று டாக்டர் விக்ரம் தெரிவித்தார். அதேசமயம் ஜெயலலிதாவுக்கு இருந்த மற்ற நோய்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறினார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக திவாகரனை சந்தித்து விக்ரம் பேசவில்லை என்றார்.

டாக்டர் ராஜ்மாதங்கி கூறும்போது, ‘வென்டிலேட்டர் (செயற்கை சுவாசம்) ெதாடர்பாக தெரிந்து கொள்வதற்காக கடந்த 2016 செப்டம்பர் 28ம் தேதி என்னை ஜெயலலிதா அழைத்தார். அதன் பேரில் அங்கு சென்றேன். அவருக்கு அது குறித்து விளக்கினேன். அதன் பிறகு நான் வந்துவிட்டேன். அதன் பிறகு அன்றைய தினம் சசிகலா, டாக்டர் சிவக்குமார், மற்றும் டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரிடம் சம்மதம் பெற்று ஜெயலலிதாவுக்கு வென்டிலேட்டர் பொருத்தியதாக அப்போலோ மருத்துவமனையின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை படித்து நான் தெரிந்து கொண்டேன். மேலும், இதயம், நுரையீரல், தைராய்டு, நீரிழிவு நோய் என சிரமப்பட்டு வந்த ஜெயலலிதா போன்ற யாராக இருந்தாலும், மருத்துவ ரீதியாக தேற்றி கொண்டு வருவது கடினம் எனவும், அதுவும் கவலைக்கிடமான நிலையில் அதை விட கடினம் என்று கூறினார் என ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜெ.வுக்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு

முன்னாள் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் 2வது நாளாக நேற்று விசாரணை ஆணையத்தில் நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் ஆஜரானார். அப்போது, அவர் அளித்த வாக்குமூலம் குறித்து ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், அப்போலோ மருத்துவமனை வெளியே நான்கு அடுக்கு பாதுகாப்பு ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டது. மருத்துவமனை வெளியே சென்னை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டிலும், உட்புறம் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற தளத்தில் ஐஜி.சத்தியமூர்த்தி மற்றும் துணை ஆணையராக இருந்த சுதாகர் தலைமையிலும் பாதுகாப்பு வழங்கப்பட்டது. கூடுதலாக இசட் பிரிவு பாதுகாப்பும், ஜெயலலிதாவின் தனிப்பிரிவு அதிகாரிகளின் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இருப்பினும் நான்கு பிரிவினரும் ஒருங்கிணைந்த கூட்டம் நடத்தவில்லை.  போயஸ் கார்டனில் வருமான வரித்துறையினர் சோதனையின் போது சசிகலா தங்கியிருந்த அறையில் குட்கா ஊழல் தொடர்பாக டிஜிபி அசோக்குமார் அரசுக்கு எழுதிய கடிதம் கிடைத்தது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. பத்திரிகைகள் வாயிலாக கேள்விப்பட்டேன்’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • georgiyaropecar

  ஜார்ஜியா நாட்டில் ரோப் கார்கள் மூலம் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் கிராம மக்கள்

 • chinaindustryexpo

  சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற 20வது சர்வதேச தொழில்நுட்பக் கண்காட்சி

 • thirupathiseventh

  திருப்பதியில் 7வது நாள் பிரமோற்சவம் : சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

 • 20-09-2018

  20-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • amazon_bang_111

  ஆன்லைன் வர்த்தக் நிறுவனமான அமேசானின் சேகரிப்புக் கூடம் பெங்களூருவில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்