ஐபிஎல் போட்டியின் போது போலீசை தாக்கிய நாம் தமிழர் கட்சி பிரமுகரின் ஜாமீன் மனு தள்ளுபடி: செஷன்ஸ் நீதிமன்றம் அதிரடி
2018-06-15@ 01:49:27

சென்னை: ஐபிஎல் போட்டியின் போது போலீசை தாக்கிய நாம் தமிழர் கட்சி பிரமுகரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சேப்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கட்சியினர், தனியார் அமைப்புகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். அப்போது, போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளு முள்ளுவில், ஒரு வாலிபர் போலீசாரை பலமாக தாக்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், போலீசாரை தாக்கிய வாலிபர் எண்ணூர் பகுதியை சேர்ந்த மதன்குமார் என்பதும், அவர் நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் என்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், மதன்குமார் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மதனுக்கு ஜாமீன் தர மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் மதன்குமார் ஏற்கனவே இதே நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுதாக்கல் செய்து தள்ளுபடி செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
போட்டி தேர்வுக்கு தயாராக புதிய வலைதளம்
கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனருக்கு விருது
கம்பெனி அலுவலகத்தில் தீ விபத்து
மத நம்பிக்கைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது கருத்து சுதந்திரம் சவாலை எதிர்கொள்கிறது : சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
அரசு வேலை பெற பணம் கொடுத்தாலும் நடவடிக்கை : பொது அறிவிப்பு வெளியிட டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு
மாற்றுத்திறனாளிகளுக்கு நகரும் வண்டி முதல்வர் எடப்பாடி வழங்கினார்