SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்கள் எல்லோருக்கும் வேலை தரமுடியாது: மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் கைவிரிப்பு

2018-06-15@ 01:46:14

நெய்வேலி: என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் தமிழகத்தில் விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் சூரிய ஒளி மின்நிலையத்தை அமைத்துள்ளது. இந்த 300 மெகவாட் சூரிய ஒளி மின் நிலையத்தை மத்திய நிலக்கரி அமைச்சர் பியூஸ் கோயல் நெய்வேலியில் நேற்று நடந்த விழாவில் நாட்டிற்கு அர்ப்பணித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: என்எல்சி நிலக்கரி நிறுவனத்தில் இருந்து வட மாநிலத்திற்க்கு ரயில் மூலம் நிலக்கரி எடுத்த செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் அதிக ரயில் சேவைகள் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை தாம்பரம் - நெல்லை அந்த்தோதியா ரயில் கடலூர் மாவட்டத்தில் நின்று செல்ல என்எல்சி நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. அந்த ரயில் கடலூர் நின்று செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறோம். என்எல்சிக்கு வீடு, நிலம் கொடுத்தவர்கள் வேலை உரிமை கோருகிறார்கள். வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு 4 மடங்கு இழப்பீடு தொகை என்எல்சி நிர்வாகம் வழங்கி வருகிறது. இதனால் நிலம் கொடுத்தவர்கள் எல்லோருக்கும் வேலை தரமுடியாது. என்எல்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிர்வாகம் போதிய ஊதியம் வழங்கி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_protest123

    நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

  • cleanesttrainPurityIndia

    ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

  • whatsapp_police11

    வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்