SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

குமரியில் கடல் சீற்றம் வீடுகளை நீர் சூழ்ந்தது

2018-06-15@ 01:45:04

மணவாளக்குறிச்சி : குமரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.  நேற்று குளச்சல் அருகே கடியப்பட்டணத்தில் கடல் சீற்றமாக காணப்பட்டது. ராட்சத அலைகள் எழுந்து  அந்தோணியார் தெருவில் போடப்பட்டிருந்த கடலரிப்பு தடுப்பு சுவரை தாண்டி விழுந்தது. இதனால் அங்குள்ள 12 வீடுகளை கடல் நீர் சூழ்ந்தது. கடலரிப்பு தடுப்பு சுவர் கற்களும் சரிந்து கடலில் விழுந்தன. வீடுகள்  இடிந்து கடலில் விழும் அபாய நிலையில் காணப்படுகிறது.  வீட்டில் இருந்தவர்கள் அருகில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம்   சேதமடைந்துள்ள கடலரிப்பு தடுப்பு சுவரை போர்க்கால அடிப்படையில்  சீரமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்