SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகளை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க கோரி வழக்கு: ஐகோர்ட் கிளை தள்ளிவைப்பு

2018-06-15@ 01:44:42

மதுரை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்குகளை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த கோரிய மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.
தஞ்சாவூரை சேர்ந்த காளியப்பன் (எ) ராமதாஸ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் கடந்த மே 22ல் தூத்துக்குடியில் போராட்டம் நடந்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாயினர். பலர் படுகாயமடைந்தனர். போராட்டம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் நிலையங்களில் 243 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எனக்கூறி பலரது வீடுகளுக்கு சென்று போலீசார் துன்புறுத்துகின்றனர். மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த பலரை கைது செய்துள்ளனர். ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக மே 22 மற்றும் 23ல் நடந்த சம்பவம் குறித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கு ஆவணங்கள் சிபிசிஐடி எஸ்பி வசம் கொடுக்கப்பட்டுள்ளது.  ஆனால் தூத்துக்குடி எஸ்பியின் கீழுள்ள அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் சட்ட ஆலோசகர்கள், மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்களை பெருமளவு தொந்தரவு செய்கின்றனர்.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை மறைக்கும் வகையிலும், போராடுவோரை ஒடுக்கும் வகையிலும் இதுபோன்ற நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.  போராட்டம் தொடர்பாக தூத்துக்குடி போலீசார் யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும். போராட்டம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். டிஐஜி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து வழக்குகளை விசாரிக்கவும், விசாரணையை ஐகோர்ட் கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர், அரசு தரப்பில் உரிய விளக்கம் கேட்டு தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 18க்கு தள்ளி வைத்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-06-2018

    24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • kmkharippastatue

    சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

  • Stalinarrestvolunteersstirstir

    தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

  • president_kovindh_cuba123

    கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்