SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

அரவக்குறிச்சி தஞ்சை தேர்தல் செலவு வசூலிக்க கோரிய மனு தள்ளுபடி

2018-06-15@ 01:44:04

சென்னை: கடந்த 2016 மே மாதம் தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் மீதான பணப்பட்டுவாடா புகாரினால் 2 தொகுதிகளின் தேர்தல் ரத்தானது. இந்த தேர்தலில் பிற கட்சி வேட்பாளர்கள் செய்த செலவுகளை திமுக, அதிமுக வேட்பாளர்களிடமிருந்து வாங்கி தரக்கோரி அத்தொகுதிகளில் போட்டியிட்ட பாமக வேட்பாளர்கள்  பாஸ்கரன், குஞ்சிதபாதம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு பதில் தருமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர். இதையடுத்து, தேர்தல் ஆணையம் தரப்பில், `இந்தப் பணம் தொடர்பாக  வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்’ என்று தெரிவிப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் நேற்று விசாரித்து அளித்த தீர்ப்பில், `தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை வசூலிக்க வகை செய்யும் சட்டம் எதுவும் இல்லை. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று கூறினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்