SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேலத்தில் கணவர், மகனுடன் மாயமான மாநகராட்சி அதிகாரி 13 நாளுக்கு பிறகு வீடு திரும்பினார்: போலீசார் இன்று விசாரணை

2018-06-15@ 01:43:32

சேலம்:  சேலத்தில் கணவர், மகனுடன் மாயமான மாநகராட்சி பெண் அதிகாரி வீடு திரும்பினார். சேலம் மாநகராட்சியில் உதவி ஆணையாளராக பணியாற்றி வருபவர் ரங்கநாயகி(57). இவரது கணவர் மோகன், மகன் சசிதரன். கடந்த 1ம்தேதி, குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள போவதாக உறவினர்களுக்கு வாட்ஸ் அப்பில் தகவலை அனுப்பி விட்டு மாயமாகினர். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் செல்போன் டவரை வைத்து விசாரித்ததில், பெங்களூருவை காட்டியது. தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்தனர். இதற்கிடையே அங்குள்ள ஏடிஎம் மையத்தில் இருந்து 30 ஆயிரத்தை  சசிதரன் கணக்கிலிருந்து எடுத்தது தெரியவந்தது. அதற்கு பிறகு அவரது செல்போன் ஆன் செய்யப்படவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மாயமான அதிகாரி உள்பட 3 பேரும் அவர்கள் குடியிருந்த வீட்டிற்கு வந்தனர். தகவல் அறிந்த அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் குமார், வீட்டு உரிமையாளரிடம் பேசியபோது, 3 பேரும் வந்து விட்டனர் என உறுதியாக தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் வீட்டிற்கு சென்றபோது, அவர்கள் உறவினர் வீட்டிற்கு சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் சதீஸிடம் கேட்டபோது, ‘என்னிடம் அவர்கள் இன்னும் பேசவில்லை. நேரிலும் பார்க்கவில்லை. விசாரித்து விட்டு சொல்கிறேன்,’’ என்றார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மருமகளுக்கு பயந்து குடும்பத்தோடு இவர்கள் வெளி மாநிலத்திற்கு சென்றுள்ளனர். தர்மசாலா மற்றும் வடமாநிலங்களில் உள்ள முக்கிய கோயில்களுக்கு சென்றுள்ளனர். குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் புறப்பட்டு சென்ற அவர்கள், கோபம் குறைந்ததன் காரணமாக தற்கொலை முடிவை கைவிட்டு கோயிலுக்கு சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இன்று(15ம் தேதி) அவர்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_protest123

    நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

  • cleanesttrainPurityIndia

    ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

  • whatsapp_police11

    வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்