SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவை கொடிசியா அரங்கில் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

2018-06-15@ 01:42:39

சென்னை: தமிழக அரசின் சார்பாக கோவையில் உள்ள கொடிசியா அரங்கில் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி ரூ.2 கோடி செலவில் நடத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி கூறினார்.
சட்டப்பேரவையில் நேற்று 110வது விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை படித்தார். அதில் கூறி இருப்பதாவது:
* கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்கும் பொருட்டு, வரும் பொங்கல் 2019 முதல் ஜூன் மாதம் வரை கூடுதல் உற்பத்தி திட்டம் வழங்கப்படும். இதற்காக ஆண்டொன்றுக்கு அரசுக்கு ரூ.15 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.  
* நடப்பாண்டில் தமிழ்நாடு அரசின் சார்பாக கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா அரங்கில் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி ரூ.2 கோடி செலவில் நடத்தப்படும்.  
* வெண்பட்டு முட்டை உற்பத்தியை அதிகரித்து அதனை பதனப்படுத்திட, மேலும் ஒரு, 20 லட்சம் பட்டு முட்டைகளை பதனம் செய்யும் திறன் கொண்ட பல்நிலை குளிர்பதன அலகு, ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில்  நிறுவப்படும்.
* தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பட்டுக்கூடுகளை முழுவதுமாக பயன்படுத்தி பட்டு நூல் உற்பத்தி செய்ய, போதுமான பட்டு நூற்பு அலகுகள் இல்லை என்பதால், பட்டுக் கூடுகளுக்கு பிந்தைய பட்டு நூற்பு பிரிவை வலுப்படுத்தும் நோக்கில் நடப்பாண்டில் பட்டு நூற்பு அலகுகள் நிறுவப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-06-2018

    24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • kmkharippastatue

    சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

  • Stalinarrestvolunteersstirstir

    தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

  • president_kovindh_cuba123

    கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்