SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

குழந்தைகளுக்கு குறைபாட்டை ஆரம்ப நிலையில் கண்டறிய சென்னையில் 3 மருத்துவமனையில் தனி மையம்: அமைச்சர் அறிவிப்பு

2018-06-15@ 01:42:12

சென்னை: சென்னையில் 3 அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான குறைபாட்டை ஆரம்ப நிலையில் கண்டறிய சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
சட்டசபையில் சுகாதாரத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்த பிறகு வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:
* காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, விபத்து காய சிகிச்சை ஒப்புயர்வு மையமாக ரூ.8.55 கோடியில் தரம் உயர்த்தப்படும்.
* திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அரூர் மற்றும் திண்டிவனம் அரசு வட்ட மருத்துவமனைகளில் ‘தாய்’ திட்டத்தின் கீழ் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையங்கள் ரூ.4.4 கோடியில் ஏற்படுத்தப்படும்.
* அதிக சாலை விபத்துகள் நிகழும் பகுதிகளான சூளகிரி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வட்ட மருத்துவமனையில் ‘தாய்’ திட்டத்தின் கீழ் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையங்கள் ரூ.2 கோடியே 8 லட்சம்  செலவில் நிறுவப்படும்.
* ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ‘தாய்’ திட்டத்தின் கீழ் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம் ரூ.2 கோடி செலவில் நவீனப்படுத்தப்படும்.
* சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கல்லீரல் பாதிப்பு விளிம்பு நிலை நோயாளிகளுக்கான ஸ்டெம் செல் சிகிச்சை ரூ.4.3 கோடியில் மேற்கொள்ளப்படும்.
மேலும், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.13 லட்சத்தில் வைரல் ஹெபடைடிஸ் கண்காணிப்பு மையம் அமைக்கப்படும்.
* சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத் துறைக்கு நவீன மருத்துவக் கருவிகள் ரூ.4.23 கோடியில் வழங்கப்படும்.
* எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், குழந்தைகளுக்கான குறைபாடுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் மையம் ரூ.1.5 கோடியில் அமைக்கப்படும்.

ஆன்லைன் மூலம் செவிலியர்களுக்கு டிரான்ஸ்பர்

அமைச்சர் சி.விஜயபாஸ்கர்  பேசியதாவது: செவிலியர்களைப்  பொறுத்தவரையில் 7, 8 ஆண்டுகளாக செவிலியர்கள் நியமனம் என்பது இல்லை.   இப்போது, 9,533 செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டு,   அவர்களுக்கு ரூ.7,000  ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது. படிப்படியாக அவர்கள் பணி நிரந்தரம்  செய்யப்படுவார்கள் என்ற உறுதியும் அளிக்கப்பட்டது. தற்போது அவர்களுக்கு  இருமடங்காக சம்பளத்தை உயர்த்தி ரூ.14,000 ஆக அரசு முடிவு செய்து, அரசாணை  பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.  மேலும், செவிலியர்களுக்கு பணி மாறுதலை  ஆண்டுதோறும் நடத்த வேண்டுமென்று சொன்னார்கள்.  கல்வித் துறையில் நடப்பது  போன்று, ஆன்லைனில் கவுன்சிலிங் கொண்டு வரப்படும் என்கிற அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான சாப்ட்வேர் தயாராகி கொண்டிருக்கின்றது.  விரைவில் அதுவும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். கடந்த ஆண்டை விட இந்த  ஆண்டு நீட் தேர்வில் 12,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி  பெற்றிருக்கிறார்கள். கூடுதலாக தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். மாணவர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இந்த ஆண்டு இப்பொழுது தான்  மாணவர்கள் பயிற்சியில் கவனம் செலுத்துகிறார்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • modi68bday

  வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

 • losangeleswaterlight

  லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

 • vinayagarsilai

  சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

 • mankutstromchina

  தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

 • tirupathififth

  திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்