SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விஜயபாஸ்கர் பதில் உரையை புறக்கணித்த திமுக எம்எல்ஏக்கள்

2018-06-15@ 01:39:12

சென்னை: திமுக எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் (பழனி): கடந்த 2010ல் திமுக ஆட்சி காலத்தில் திண்டுக்கல்லில் மருத்துவக்கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அமைச்சர் விஜயபாஸ்கர் : திண்டுக்கல்லில் மருத்துவ கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை அமைப்பது தொடர்பாக பரிசீலனையில் உள்ளது. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் : திமுக ஆட்சி காலம் முடியும் நேரத்தில் திண்டுக்கல்லில் மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை அமைக்கப்படும் என்று ஒப்புக்காக ஒரு அரசாணை போட்டுள்ளனர்.

இதற்கு, சட்டசபையில் திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒப்புக்காக என்ற வார்த்தையை நீக்க வேண்டும் என்று அவர்கள் சபாநாயகரிடம் தெரிவித்தனர். நீங்கள் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறீர்கள் என்று தெரிவித்தனர். அப்போது சபாநாயகர் : நான் பொதுவானர், என்னை ஒரு பக்கம் சேர்க்காதீர்கள். ஐ.பி.செந்தில்குமார் : அப்படி எனில், இந்த ஆட்சியில் வெளியிடப்படும் எல்லா அரசாணையும் ஒப்புக்காகதான் போடப்படுகிறதா?
சபாநாயகர் தனபால் : அமைச்சர் பதிலுரையில் நிறைய விஷயம் இருப்பதால் அமருங்கள் என்று திமுக எம்எல்ஏக்களை சமாதானம் செய்தார்.
தொடர்ந்து திமுக கொறடா சக்கரபாணி : ஒரு வழக்கு விவகாரம் தொடர்பாக பேசினார். சபாநாயகர் : நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அதை பற்றி பேசக்கூடாது. அவை குறிப்பில் இருந்து இந்த வார்த்தை நீக்கப்படுகிறது. கொறடா சக்கரபாணி : இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் நாங்கள் அமைச்சர் விஜயபாஸ்கரின் பதிலுரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்கிறோம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thiruvan_5thdaycelb

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

  • rarephots_indiragandhi

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

  • 2018_indiragandibirthdy

    இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

  • america_winterstorm2018

    வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

  • 2018wildfire_trumph

    கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்