SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அமைச்சரவை தீர்மானம்: அரசுக்கு மு.க.ஸ்டாலின் மீண்டும் கோரிக்கை

2018-06-15@ 01:38:47

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மதுரை நீதிமன்ற கருத்துக்களை மேற்கோள்காட்டி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மீண்டும் வலியுறுத்தினார்.
சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பற்றி, நேற்று முன்தினம் மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள், சில கருத்துக்களை கூறியுள்ளனர். குறிப்பாக ஆலையை மூட, அரசு வெளியிட்டுள்ள உத்தரவு பிறப்பித்துள்ளது பற்றி கருத்து தெரிவித்துள்ளனர். நீதிபதிகள், இதுபோன்று கருத்துக்கள் தெரிவித்துள்ளதால், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று, அரசு கொள்கை முடிவை அமைச்சரவையை கூட்டி எடுக்க வேண்டும். சபாநாயகர் தனபால்: மதுரை உயர் நீதிமன்ற கிளை சில கருத்துக்களை சொல்லியுள்ளது. சட்டசபை விதி 92/1ன் கீழ் கூறப்பட்டுள்ளபடி, ‘நீதிமன்றத்தில் ஒரு பிரச்னை விசாரணையில் இருக்கும்போது, சட்டசபையில் விவாதிக்க கூடாது’ என்று கூறப்பட்டுள்ளது. வரும் 22ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதனால் இதுபற்றி இங்கு மேற்கொண்டு விவாதிக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சி தலைவரை கேட்டு கொள்கிறேன்.

மு.க.ஸ்டாலின்: மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் தெரிவித்திருக்கும் கருத்துக்களின்படி, மீண்டும் இந்த அரசை வலியுறுத்துவது என்னவென்றால், அமைச்சரவையை கூட்டி, ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். அதேபோன்று சட்டமன்றத்திலும் தீர்மானம் போட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். சபாநாயகர்: எதிர்க்கட்சி தலைவர் ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார். அதை, நான் நிராகரிக்கவில்லை. வரும் 22ம் தேதி வழக்கு விசாரணைக்கு வர உள்ளதால், அவர் கூறிய ஒரு கருத்தை மட்டும் அவை குறிப்பில் இருந்து நீக்குகிறேன். (திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்) எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது பற்றி, அமைச்சரவை அல்லது சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவீர்களா என்று எதிர்கட்சி தலைவர் கேட்கிறார். அதற்கு, முடியும் அல்லது முடியாது என்று சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு, வழக்கு இருக்கு என்று சொல்வது எப்படி சரியாகும். சபாநாயகர்: எதிர்க்கட்சி தலைவர் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் இடம்பெறும். அவர் கூறிய ஒரே ஒரு வார்த்தை மட்டும் அவை குறிப்பில் இருக்காது. 22ம் தேதி விசாரணைக்கு வருவதால், இறுதி தீர்ப்புக்கு பிறகு பார்க்கலாம். இவ்வாறு விவாதம் நடந்தது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_protest123

    நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

  • cleanesttrainPurityIndia

    ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

  • whatsapp_police11

    வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்