SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

திமுக எம்எல்ஏ சொன்ன குறள் நீக்கம்: ஸ்டாலின் வாக்குவாதம் திமுக வெளிநடப்பு

2018-06-15@ 01:38:20

சென்னை: சட்டப் பேரவையில் நேற்று திமுக எம்.எல்.ஏ. மாசிலாமணி அதிமுக ஆட்சி பற்றி கூறிய திருக்குறளை அவைக்குறிப்பிலிருந்து நீக்கியதை கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்கள். மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீது மைலம் டாக்டர் மாசிலாமணி (திமுக பேசியதாவது): தமிழகத்திற்கு 1 லட்சம் டாக்டர்கள் தேவைப்படுகிறார்கள். எனவே கூடுதல் டாக்டர்களை நியமனம் செய்ய வேண்டும். அமைச்சர் விஜயபாஸ்கர்: 5 ஆண்டுக்கு மேல் பணி புரியும் தற்காலிக செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய அரசு பரிசீலித்து வருகிறது. மாசிலாமணி: ஓமந்தூரார் கட்டிடத்தை கருணாநிதி கட்டினார். நீங்கள் மருத்துவமனை அமைத்தீர்கள். தனது பேச்சை முடிக்கும் முன்,
‘‘வெரு வந்த செய்தொழுகும் வெங்கோலனாயின்
னொரு வந்த மொல்லைக் கெடும்’’
என்ற குறளைக் கூறி பொருளையும் கூறினார்.

இதற்கு துணை முதல்வர் ஒ. பன்னீர் செல்வம் எதிர்ப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அதை நீக்குவதாக பேரவை துணை தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார். இதற்கு மு.க.ஸ்டாலின், துரைமுருகன் மற்றும் திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பேரவை துணை தலைவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து ஆட்சி பற்றி கூறிய வார்ததையை நீக்குவதாக பொள்ளாச்சி ஜெயராமன் அறிவித்தார் திருக்குறளை நீக்கியதைக் கண்டித்து பின்னர் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்