SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஊழலில் திளைக்கும் அதிமுக ஆட்சியை அகற்றவேண்டிய தருணம்: காங்கிரஸ் தொண்டர்களுக்கு திருநாவுக்கரசர் வேண்டுகோள்

2018-06-15@ 01:37:02

சென்னை: தமிழகத்தில் ஊழலில் திளைக்கும் அதிமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல்காந்தியின் 49-வது பிறந்த நாளை வரும் 19ம் தேதி தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடுவதற்குரிய ஏற்பாடுகளை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் செய்ய கேட்டுக் கொள்கிறேன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகள் எதையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை என்கிற கோபம் நாட்டு மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் நடைபெற்று வருகிற மக்கள் விரோத அதிமுக ஊழல் ஆட்சியை அகற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது. இதன் மூலம் மத்தியிலும், மாநிலத்திலும் நடைபெற்று வருகிற ஜனநாயக விரோத ஆட்சிகள் அகற்றப்பட்டு மீண்டும் நல்லாட்சி மலர்ந்திட அயராது உழைப்பதே ராகுல்காந்தி பிறந்தநாளில் காங்கிரஸ் கட்சியினர் மேற்கொள்ள வேண்டிய சூளுரையாகும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • amazon_bang_111

    ஆன்லைன் வர்த்தக் நிறுவனமான அமேசானின் சேகரிப்புக் கூடம் பெங்களூருவில் திறப்பு

  • northkorea_southkore

    வட கொரியாவில் முதன்முறையாக தென் கொரியா அதிபர் சுற்றுப் பயணம்

  • americatoday_flood123

    அமெரிக்காவின் கரோலினாவை புரட்டிய ஃபுலோரன்ஸ் புயல்

  • pakistan_vehicls12345

    பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் பயன்படுத்தப்படும் 70 சொசுகு வாகனங்கள் ஏலம்

  • jawa_studentelection123

    ஜேஎன்யூ மாணவர் தேர்தல் - அனைத்திலும் இடதுசாரி மாணவர் அமைப்பினர் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்