SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

அரசு மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு சிகிச்சை

2018-06-15@ 01:36:13

சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு சென்னை அரசுப் பொது மருத்துவமனையில்  டாக்டர்கள் நேற்று சிகிச்சை அளித்தனர். ராஜிவ் காந்தி கொலை வழக்கில், கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் சிறையில் உள்ளார். வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் கடந்த சில ஆண்டுகளாக சிறுநீர் தொற்று, மூட்டுவலியால் அவதிப்பட்டு வருகிறார். மேல் சிகிச்சைக்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுநீர் தொற்று, மூட்டு வலிக்காக அவர் இரு மருத்துவமனைகளிலும் மாறி மாறி சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், நேற்று காலை பேரறிவாளன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே உள்ள அரசுப் பொது மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். அவருக்கு சிறுநீரகவியல், முடநீக்கியல் துறையின் புறநோயாளிகள் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. டாக்டர்கள் அவருக்கு உரிய சிகிச்சை அளித்தனர். மூன்று வாரத்துக்கான மருந்து, மாத்திரைகளை வழங்கினர். அதைத்தொடர்ந்து, அவரை புழல் சிறைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்