SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் ஊதிய உயர்வு விவகாரம்: முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி

2018-06-15@ 01:35:32

சென்னை: போக்குவரத்து தொழிற்சங்களின் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் மீண்டும் ஜூலை 12ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தொழிற்சங்க கூட்டமைப்பினர் கூறினர். சென்னையில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் முத்தரப்பு பேச்சுவார்த்தை நேற்று சிறப்பு தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர்  சாந்தி தலைமையில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்து துறை சார்பில் எம்டிசி நிர்வாக இயக்குநர் அன்பு ஆபிரகாம், எஸ்இடிசி நிர்வாக இயக்குநர் பாஸ்கர் ஆகியோரும் திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, சிஐடியு உட்பட 10 சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தை காலை 11.30 மணியளவில் தொடங்கப்பட்டது. இதில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இனிமேல் போராட்டங்கள் நடத்தக் கூடாது என்று தொழிலாளர்களிடம் கையெழுத்து வாங்கியதாக குற்றம் சாட்டினர். அதற்கு அதிகாரிகள் மறுத்தனர். இதையடுத்து வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே இணை ஆணையர் சாந்தி குறுக்கிட்டு போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் நீங்கள் கையெழுத்து வாங்கிய பேப்பரை ஜூலை 12ம் தேதி கொண்டு வாருங்கள் அதன்பிறகு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் அதுவரை தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று கூறினார். இதையடுத்து கூட்டம் பிற்பகல் 1.25 மணிக்கு நிறைவுற்றது.

பின்னர் தொமுச பொருளாளர் நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: போக்குவரத்து தொழிலாளர்களின் 13வது ஊதிய ஒப்பந்தம்கேட்டு வேலை நிறுத்தம் செய்ததை காரணம் காட்டியும், ஊதிய ஒப்பந்தத்தில் ஒப்புக் கொண்ட பல்வேறு விஷயங்களை நடைமுறைப்படுத்தவும் மறுத்து வருகின்றனர்.
எனவே தொழிற்சங்கள் சார்பில் வேலை நிறுத்த அறிவிப்பை கொடுத்தோம். அதன் பின் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். தொழிற்சங்கங்கள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு நிர்வாகம் சார்பில் பதில் அளிக்காமல் மீண்டும் மீண்டும் பேசியதையே பேசிக் கொண்டு இருந்தனர். ேமலும், நிர்வாகம் சார்பில் எங்களுக்கான இடம் மாற்றம், ஆயுள்பலன் போன்றவை குற்றச்சாட்டுகளை காரணம் காட்டி நிராகரிக்கப்படுகிறது என்று கூறினோம். இதற்கு  நிர்வாகத்தினர் உரிய விளக்கம் அளிக்க ஜுலை 12ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதுவரை தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடக் கூடாது, நிர்வாகம் எந்த விதமான கடுமையான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று கூறினர். நிர்வாகம் எந்த அளவிற்கு கடைபிடிக்கிறதோ? அந்த அளவிற்கு நாங்களும் ஒத்துழைப்போம். மேலும் வாழ்நாள் முழுவதும் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று எழுதிக் கேட்கிறார்கள் அதற்கு தொழிற்சங்கம் சார்பில் தர முடியாது என்றோம்.இவ்வாறு கூறினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-06-2018

  24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • kmkharippastatue

  சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

 • Stalinarrestvolunteersstirstir

  தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

 • president_kovindh_cuba123

  கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

 • RePlantingCanada

  அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்