SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

19ம் தேதி இணையதளத்தில் இருந்து பிளஸ் 2 தனி தேர்வர்கள்: ஹால்டிக்கெட் பதிவிறக்கலாம்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

2018-06-15@ 01:35:05

சென்னை: பிளஸ் 2 தனி தேர்வர்கள் வரும் 19ம் தேதி பிற்பகல் முதல் இணையத்தில் தேர்வு கூட நுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஜூன், ஜூலை 2018 மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்புத் துணைத்தேர்வு எழுத அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தட்கல் உட்பட) 19.6.2018 (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை அடங்கிய பாடங்களில் செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்களுக்கு குறைவாகப் பெற்று, தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேர்வினை மீண்டும் செய்வதோடு எழுத்துத் தேர்விற்கும் வருகை புரிய வேண்டும். அதிகபட்ச மதிப்பெண் 200 கொண்ட செய்முறை மட்டும் உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் செய்முறைத் தேர்விற்கு வருகை தர வேண்டும். மொழிப் பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி (தமிழ்) பாடத்தில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள் தாம் தேர்வெழுதும் தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வுக் கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • georgiyaropecar

    ஜார்ஜியா நாட்டில் ரோப் கார்கள் மூலம் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் கிராம மக்கள்

  • chinaindustryexpo

    சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற 20வது சர்வதேச தொழில்நுட்பக் கண்காட்சி

  • thirupathiseventh

    திருப்பதியில் 7வது நாள் பிரமோற்சவம் : சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

  • 20-09-2018

    20-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • amazon_bang_111

    ஆன்லைன் வர்த்தக் நிறுவனமான அமேசானின் சேகரிப்புக் கூடம் பெங்களூருவில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்