மீனவர் ஐக்கிய கிராம கட்டிடத்துக்கு பூட்டு ஜெயக்குமார் - மதுசூதனன் ஆதரவாளர்கள் மோதல்
2018-06-15@ 01:34:01

சென்னை: சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 18 மீனவ கிராமத்துக்கு உட்பட்ட மீனவர் ஐக்கிய கிராமத்து பஞ்சாயத்து சபை செயல்படுகிறது.
இதில் திருவொற்றியூர், ஆர்கேநகர், ராயபுரம் ஆகிய மீனவ கிராமத்தை சேர்ந்தவர்கள் நிர்வாகிகளாக உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சூழற்சி முறையில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.கடந்த 2016ம் ஆண்டு சபையில் கல்வி அறக்கட்டளை நிதி மோசடியில் நிர்வாகிகள் பலர் ஈடுபட்டதாக காசிமேடு மீன்பிடி துறை போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். வட்டாட்சியர், ஆர்டிஓ ஆகியோர் இதுபற்றி விசாரணை நடத்த பரிந்துரை செய்தனர். இதையடுத்து பஞ்சாயத்து சபை கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில், மீன்பிடி தடை காலம் முடிந்து கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் நிலையில், அமைச்சர் ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் பஞ்சாயத்து சபை கட்டிடத்தை திறந்து வர்ணம் பூசி தயார் நிலையில் வைத்திருந்தனர்.
இதுபற்றி அறிந்ததும் மதுசூதனன் ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் பஞ்சாயத்து சபை கட்டிடத்துக்கு நேற்று காலை வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களும் சபை கட்டிடத்துக்கு பூட்டுபோட்டனர். இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையறிந்ததும் அமைச்சர் ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் திரண்டனர். இரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.அவர்களை மீனவ சங்க நிர்வாகிகள் சமாதானம் செய்தனர். இருப்பினும் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இதனால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பதற்றம் நிலவுகிறது.
மேலும் செய்திகள்
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு
தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்கிறது: மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
கலைஞர் மீது அளவுகடந்த பாசம் கொண்டவர் விஜயகாந்த்; சந்திப்புக்கு பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி
அதிமுகவையும், முதல்வரையும் விமர்சித்து விட்டு பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது : திமுக தலைவர் ஸ்டாலின் கடும் விமர்சனம்
அதிமுக - பாஜக பேச்சில் இழுபறி நிலையில் தேமுதிகவில் 24-ம் தேதி முதல் விருப்பமனு விநியோகம்... விஜயகாந்த் அறிவிப்பு
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு தீவிரம்; மதிமுக, வி.சி.க. முஸ்லீம் லீக் கட்சியுடன் இன்று ஆலோசனை
சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!
சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை
திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா
சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்
கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு