SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மும்பையில் அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாற 5 சவரன் நகையுடன் ஓடிய பெண்: காவல் நிலையத்தில் பெற்றோர் பரபரப்பு புகார்

2018-06-15@ 01:33:30

சென்னை: மும்பையில் அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறுவதற்காக, 5 சவரன் நகையுடன் மும்பைக்கு தப்பி சென்ற மகளை கண்டுபிடித்து தரக்கோரி காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆர்.ஏ. புரத்தை சேர்ந்தவர் குமார் (52). இவர், கடந்த 7ம் தேதி அபிராமபுரம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில் மகன் ஒருவரும், மோனிகா (எ) ரோஷன் (25) என்ற மகள் ஒருவரும் உள்ளனர். கடந்த 6ம் தேதி இரவு வீட்டில் அனைவரும் தூங்கினோம். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது மகள் மோனிகா (எ) ரோஷன் மட்டும் மாயமாகி இருந்தார். அவரது அறையில் ஒரு கடிதம் இருந்தது. அதில் “நான் மும்பைக்கு சென்று பெண்ணாக இருந்து ஆணாக மாறப் போவதாகவும், அதற்கு பணம் தேவைப்படுகிறது” என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, எனது மனைவியின் 5 சவரன் நகையை எடுத்துக் கொண்டு சென்று விட்டார். எனவே மகள் மோனிகா, 5 சவரன் நகையை மீட்டு தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். உடனே போலீசார் புகார் அளித்த குமாரின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, மோனிகா (எ) ரோஷன் வீட்டிற்கு ஏற்கனவே வேலை தொடர்பான ஆய்வுக்கு போலீசார் வந்தது தெரியவந்தது. கடந்த மாதம் இதே முகவரில் இருந்துதான் ரோஷன் (25) என்பவர் வெளிநாட்டு கொரியர் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்திருந்தார். ரோஷனின் விண்ணப்பத்தை ஆய்வு செய்த கொரியர் நிறுவனம் அவரை வேலைக்கு தேர்வு செய்தனர். ஆனால் வெளிநாட்டு கொரியர் நிறுவனம் என்பதால் விமான நிலையத்திற்கு அடிக்கடி சென்று வர வேண்டும்.

இதனால் காவல் நிலையத்தில் தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பித்திருந்தார். போலீசார் சென்றபோது வீட்டில் ரோஷனின் தாய் மட்டும் இருந்துள்ளார். ரோஷன் குறித்து போலீசார் அவரது தாயாரிடம் தகவல் கேட்டனர். தகவலின்படி ரோஷன் இந்த வீட்டில்தான் வசித்து வருவது உறுதி செய்யப்பட்டது. பின்னர் ஆய்வின் போது ரோஷன் வீட்டில் இல்லாததால் அவரது புகைப்படத்தை போலீசார் அவரது தாயாரிடம் கேட்டனர்.
அப்போது ரோஷன் தாயார் பெண் ஒருவரின் புகைப்படத்தை கொண்டு வந்து காண்பித்தார். அந்த புகைப்படத்தை வாங்கி பார்த்த போலீசார், உங்கள் மகள் புகைப்படத்தை நாங்கள் கேட்கவில்லை. நாங்கள் ரோஷன் புகைப்படத்தை தான் கேட்டோம் என்றனர். அதற்கு ரோஷன் தாயார், எனது மகள் மோனிகா தான் ரோஷன் என்று கூறினார். அதை கேட்டு போலீசார் அதிர்ச்சியுடன் திரும்பி வந்துவிட்டனர். இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பிறகுதான், மோனிகா (எ) ரோஷன் ஆணாக மாற அறுவை சிகிச்சை செய்ய மும்பை சென்றது தெரியவந்தது. இதையடுத்து புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-02-2019

    24-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்