SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிறை தெரியாததால் ரம்ஜான் நாளை கொண்டாடப்படும்: தலைமை காஜி அறிவிப்பு

2018-06-15@ 01:33:04

சென்னை: பிறை தெரியாததால் நாளை ரம்ஜான் கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அபுபக்கர் அறிவித்துள்ளார். ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு மேற்கொள்வார்கள். நோன்பு நிறைவடைந்த பிறகு பிறை தெரியும், மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். நேற்று பிறை தெரியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனவே, ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை இஸ்லாமியர்கள் மேற்கொண்டனர்.தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகைளும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சூழலில், நேற்று பிறை தெரியாததால் ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை காஜி சலா ஹீத்தீன் முஹம்மத் அய்யூப் கூறியதாவது: தமிழகத்தில் (நேற்று) வியாழக்கிழமை பிறை தெரியவில்லை. இதனால், ரம்ஜான் பண்டிகை சனிக்கிழமை (நாளை) கொண்டாடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இன்று ரம்ஜான் விடுமுறை ரத்து

பிறை தெரியாததால் இன்று அறிவிக்கப்பட்டிருந்த ரம்ஜான் விடுமுறையை ரத்து செய்து தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டது. இன்று வழக்கம் போல் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் செயல்படும். சனிக்கிழமை (நாளை) ரம்ஜான் விடுமுறை விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெள்ளிக்கிழமை விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்ததால் சனி, ஞாயிறுடன் சேர்த்து 3 நாள் விடுப்பு கிடைக்கிறது என பலர் சொந்த ஊர் சென்று விட்டனர். ஆனால் நேற்றிரவு திடீரென விடுமுறை ரத்து என அறிவிக்கப்பட்டதால் பலர் திரும்பி வர முடியாமல் திணறினர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thiruvan_5thdaycelb

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

  • rarephots_indiragandhi

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

  • 2018_indiragandibirthdy

    இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

  • america_winterstorm2018

    வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

  • 2018wildfire_trumph

    கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்