SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

14 வங்கிகளில் 824 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி கனிஷ்க் உரிமையாளர் வீடு உட்பட 138 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

2018-06-15@ 01:32:25

சென்னை: 14 வங்கிகளில் 824 கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பிக்கட்டாமல் மோசடி செய்த கனிஷ்க் தங்க நகை தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ்குமார் ஜெயின் வீடு உட்பட ரூ.138 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நேற்று அமலாக்கத்துறை முடக்கியது. சென்னையை தலைமையிடமாக கனிஷ்க் கோல்டு பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பூபேஷ்குமார் ஜெயினும், மேலும் அவரது மனைவி நீடா ஜெயினும் இயக்குநராக உள்ளனர். இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ) சார்பில் ஜனவரி மாதம் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அந்த புகாரில், கனிஷ்க் நிறுவனம் ஆண்டுதோறும் அதிக வருவாய் ஈட்டுவதாக போலி ஆண்டு அறிக்கைகளை தயாரித்து 14 வங்கிகளில் ரூ.824 கோடி கடன் பெற்று அதனை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி வருகிறது என்று கூறப்பட்டது.

அதன்படி கடந்த மார்ச் 21ம் தேதி கனிஷ்க் நிறுவனத்தின் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து சிபிஐ அதிகாரிகள் அன்றைய தினமே நுங்கம்பாக்கத்தில் உள்ள பூபேஷ்குமார் ஜெயின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 14 வங்கிகளிடம் 2009 முதல் 2017ம் ஆண்டு வரை கடன் பெறுவதற்காக சட்ட விரோதமாக கனிஷ்க் தங்க நகை தயாரிக்கும் நிறுவனத்தில் 3 ஆயிரம் கிலோ தங்கம் அதிகமாக இருப்பு இருப்பதாக போலியான நிதிநிலை அறிக்கையை தயாரித்து கடன் வாங்கியதற்கான ஆவணங்கள் சிக்கியது. மேலும், பல கோடி ரூபாய் சட்ட விரோதமாக ெவளிநாட்டு வங்கியில் முதலீடு செய்ததற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது. அதைதொடர்ந்து அமலாக்கத்துறை கனிஷ்க் தங்க நகை தயாரிக்கும் நிறுவனத்தின் மீது சட்ட விரோத பணம் பரிமாற்றம் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அனைத்தும் உறுதி செய்யப்பட்டதை தொடாந்து கனிஷ்க் தங்க நகை தயாரிக்கும் நிறுவனத்திற்கு சொந்தமான மதுராந்தகம் அருகே உள்ள புக்கத்துறை கிராமத்தில் உள்ள நிலம், கட்டிடம், தங்க நகைகள் தயாரிக்கும் எந்திரங்கள் உட்பட ரூ.48 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டது.

மேலும், அந்த நிறுவனத்தின் வங்கி கணக்கில் நிரந்தர வைப்பு தொகையாக வைத்திருந்த ரூ.143.58 கோடியை, சட்ட விரோத பண பரிமாற்றம் சட்டத்தின் கீழ் கடந்த ஏப்ரல் 26ம் தேதி அமலாக்கத்துறை முடக்கியது. மோசடிகள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டதால் கடந்த மே 25ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கனிஷ்க் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பூபேஷ்குமார் ஜெயினை கைது செய்தனர். இந்நிலையில், காஞ்சிபுரம் புதுப்பாக்கத்தில் உள்ள 135 சென்ட் நிலம், குன்றத்தூரில் உள்ள 31 சென்ட் நிலம், நுங்கம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி வீடு, மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடு உட்பட கனிஷ்க் நிறுவனத்திற்கு சொந்தமான 14 இடங்களில் உள்ள ரூ.138 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை நேற்று முடக்கியது. இதுவரை அந்த நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.329 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

  • Autoshow2019

    கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்