SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மடிப்பாக்கத்தில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்: பேரவையில் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் பேச்சு

2018-06-15@ 01:32:15

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ்(திமுக) துணை கேள்வி எழுப்பி பேசியதாவது: சோழிங்கநல்லூர் தொகுதியில் உள்ள உள்ளகரம், புழுதிவாக்கம், மடிப்பாக்கம் பகுதியில் மிகுந்த மின்னழுத்த குறைபாடு உள்ளது. அந்த பகுதியில் ஒரு துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்று நீண்ட நெடுநாட்களாக அரசிடம் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. நீண்ட நாட்களாக மின் அழுத்தம் இருந்து கொண்டிருப்பதால், மிக விரைவில் அந்த பகுதியில் ஒரு துைண மின் நிலையம் அமைத்து, இருளில் இருக்கக்கூடிய அந்த பகுதி மக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையை ஒட்டினார் போல் அமைந்துள்ள மடிப்பாக்கம், உள்ளகரம் போன்ற பகுதிகளில் எல்லாம் இன்னும் மின்னழுத்த வயர்கள் மேலே சென்று கொண்டிருக்கின்றன.

அதையெல்லாம் புதைவிடங்களாக மாற்றி தர வேண்டும். மேலும் மடிப்பாக்கத்தில் அமைந்துள்ள கார்த்திகைபுரம் பகுதியில் அமைந்துள்ள நீண்ட நெடிய ஏரியான ஐயப்பன் நகர் ஏரியில், அந்த பகுதியில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் காலையில் நடைபயணமும், மாலையில் பொழுது போக்காக அமர்ந்தும் இருக்கின்றனர். அந்த பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 40 லட்சம் செலவில் நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், அங்கே மேலே செல்கின்ற வயர்கள் மற்றும் மின்கம்பங்கள் அந்த நடைபாதையில் செல்வதற்கு இடையூறாக இருக்கிறது. முன்னுரிமை அடிப்படையில் அந்த கார்த்திகைபுரம் ரோட்டில் இருக்கிற அந்த மின் கம்பங்களை, புதைவடமாக உடனடியாக மாற்றி தந்தால் அந்த பணி மீண்டும் தொடருவதற்கு வசதியாக இருக்கும்.

அமைச்சர் தங்கமணி: எல்.டி.கம்பமாக இருந்தால் அதை மாற்றி தருவதற்கு உண்டான நடவடிக்கையை நாங்கள் எடுக்கின்றோம். எச்.டி.கம்பமாக இருந்தால் அதற்கு மாற்று இடம் தேர்வு செய்வது தான் நாம் செய்ய முடியும். நடைபாதை மக்களின் நலனுக்காக அமைக்கிறின்றீர்கள். நான் இல்லை என்று சொல்லவில்லை. எச்.டி.கம்பமாக இருந்தால் நீங்கள் மாற்றி அமைத்தால் நன்றாக இருக்கும். இவ்வாறு விவாதம் நடந்தது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-02-2019

    24-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்