SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

தாம்பரம் நகராட்சியில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் பணி விரைவில் தொடக்கம்

2018-06-15@ 01:31:31

தாம்பரம்: தாம்பரம்  நகராட்சியில் சேகரிக்கப்பட்ட உபயோகமில்லாத 2 டன் பிளாஸ்டிக் குப்பைகள் அரியலூர் சிமென்ட் ஆலைக்கு அனுப்பப்பட்டது. மக்கும் குப்பையில் இருந்து உரமோ அல்லது உயிரி எரிவாயுவோ தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.தாம்பரம்  நகராட்சியில் சேகரமாகும் திடக்கழிவுகளை, நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் உத்தரவின்படி வீடுகளிலிருந்து மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என்று பிரித்து வாங்கும் பணி துவங்கியுள்ளது. வாரம் தோறும் புதன்கிழமைகளில் பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. மக்கும் திடக்கழிவுகளிலிருந்து, உரம் மற்றும் உயிரி எரிவாயு தயாரிக்கும் பணியினை, பல்வேறு முறைகளில் செயல்படுத்த நகராட்சி ஆரம்பித்துள்ளது. அதன்படி, நுண் உர செயலாக்கமையம், சிறிய வகை நுண் உர செயலாக்க மையங்கள் அமைக்கும் பணிகள் 20 இடங்களில் நடைபெற்று வருகின்றன. விரைவில் தாம்பரம் நகராட்சிகளில் சேரகமாகும் மக்கும் குப்பைகள் அனைத்தும் உரமாகவோ அல்லது உயிரி எரிவாயுவாகவோ மாற்றப்படும்.

மேலும், மக்காத குப்பைகளிலிருந்து மறு சுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் புதன்கிழமை தோறும் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் வாங்கப்படுகிறது. உபயோகப்படுத்த முடியாத பிளாஸ்டிக் கழிவுகளை, நகராட்சி மண்டல இயக்குனர் இளங்கோவன்  உத்தரவின்படி, அரியலூரில் உள்ள சிமென்ட் தொழிற்சாலைக்கு அவர்களின் எரிபொருள் பயன்பாட்டிற்கு அனுப்ப புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்பேரில், நேற்று தாம்பரம் நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் முதல் முறையாக 2 டன் அளவிலான உபயோகப்படுத்த முடியாத பிளாஸ்டிக் கழிவுகள் அரியலூர், சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டது. அப்போது, நகராட்சி சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம், ஆய்வாளர்கள் ஆல்பர்ட் அருள்ராஜ், சிவக்குமார், காளிதாஸ் உட்பட நகராட்சி சுகாதாரதுறையினர் உடன் இருந்தனர். தொடர்ந்து இதுபோன்று நகராட்சியில் சேகரமாகும் மக்காத குப்பைகளிலிருந்து உபயோகமில்லாத பிளாஸ்டிக் கழிவுகள் பிரித்தெடுக்கப்பட்டு சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பப்படும் என்று நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்