SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் செல்லத்துரை நியமனம் செல்லாது: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

2018-06-15@ 01:31:12

சென்னை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட செயலாளர் லயோனல் அந்தோணிராஜ், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்பு குழுவின் கன்வீனராக பேராசிரியர் சீனிவாசன் என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் அவரை ஒரு கும்பல் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் தற்போது காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக உள்ள செல்லதுரை சம்பந்தப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, செல்லத்துரை உள்பட சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. மேலும் செல்லதுரைக்கு பேராசிரியராக பணியாற்றிய அனுபவமும் கிடையாது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் பல்கலைக்கழக துணைவேந்தராக அவர் நியமிக்கப்பட்டு உள்ளார். துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளதால் அவர் பல்கலைக்கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறார். எனவே அவர் புதிதாக பணியிடங்களை நிரப்புவதற்கு தடை விதிக்க வேண்டும். அவரை துணைவேந்தராக நியமனம் செய்ததை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர். இந்த மனுவை விசாரித்த தலைமை நிதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் நேற்று தீர்ப்பளித்தது. தீர்ப்பில் கூறியிருப்பதாவது: பல்கலைக்கழகம் என்பது கல்வியின் தரத்தை உயர்த்தும் ஒரு உன்னதமான உயர்ந்த அமைப்பு. தேசியத்தின் தலைவிதியை முடிவு செய்யும் கல்வியை வளர்க்கும் பல்கலைக்கழகத்தின் உயர் பதவிக்கான தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுவிடக் கூடாது. மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டவர் மீது கிரிமினல் வழக்கு உள்ளதை தேர்வுக் குழு கவனிக்கத் தவறிவிட்டது. தேர்வுக் குழுவில் முக்கிய பிரமுகர்களின் தலையீடு உள்ளதாக தெரிவித்து தேர்வுக்குழு உறுப்பினர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். விதிமுறைகளுக்கு முரணாக நியமனம் செய்யப்பட்ட செல்லத்துரையை பதவியிலிருந்து நீக்கம் செய்யும் கோரிக்கை நியாயமானதுதான்.  எனவே, செல்லதுரை துணைவேந்தராக நியமிக்கப்பட்டது செல்லாது. புதிய துணை வேந்தரை தேர்வு செய்வதற்கான புதிய தேர்வு குழு அமைக்கப்பட வேண்டும். இந்த தேர்வுக் குழுவுக்கு பல்கலைக்கழக செனட்டிலிருந்து ஒருவரும், சிண்டிகேட்டிலிருந்து ஒருவரும், வேந்தர் தரப்பிலிருந்து ஒருவரும் உறுப்பினர்களாக தேர்வு செய்ய வேண்டும். இந்த தேர்வு நடைமுறைகள் 3 மாதங்களுக்குள் முடிவடைய வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-06-2018

  23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • chennai_protest123

  நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

 • cleanesttrainPurityIndia

  ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

 • fifa_fans123

  உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

 • whatsapp_police11

  வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்