வழக்குகளை திருவள்ளூருக்கு மாற்ற எதிர்ப்பு: வக்கீல்கள் 2வது நாளாக கோர்ட் புறக்கணிப்பு
2018-06-15@ 01:30:48

புழல்: பொன்னேரியில் சார்பு நீதிமன்றம், மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1 மற்றும் எண் 2 என்று மொத்தம் 5 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.இங்கு ஏற்கனவே மோட்டார் வாகன வழக்கு, நில ஆர்ஜித வழக்கு மற்றும் குடும்பநல வழக்குகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் பொன்னேரி நீதிமன்றத்தில் நடந்து வந்த 3 பிரிவு வழக்குகளும் தற்போது திருவள்ளூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக வக்கீல்களூக்கு தகவல் கிடைத்தது.
இதனால் பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வழக்கு நிமித்தமாக திருவள்ளூருக்கு சென்று வர பொதுமக்களுக்கு பணமும், நேரமும் வீணாகும் அபாயம் உள்ளது. எனவே, இந்த வழக்குகளை திருவள்ளூர் நீதிமன்றத்துக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் காலை முதல் 500க்கும் மேற்பட்ட வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்னையில் இதுவரை எவ்விதமான முடிவும் எடுக்கப்படாததால் நேற்று 2வது நாளாக நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் வக்கீல்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள்
போட்டி தேர்வுக்கு தயாராக புதிய வலைதளம்
கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனருக்கு விருது
கம்பெனி அலுவலகத்தில் தீ விபத்து
மத நம்பிக்கைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது கருத்து சுதந்திரம் சவாலை எதிர்கொள்கிறது : சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
அரசு வேலை பெற பணம் கொடுத்தாலும் நடவடிக்கை : பொது அறிவிப்பு வெளியிட டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு
மாற்றுத்திறனாளிகளுக்கு நகரும் வண்டி முதல்வர் எடப்பாடி வழங்கினார்