SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஊட்டி-குன்னூர் மலைப்பாதையில் 200 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 8 பேர் பலி

2018-06-15@ 01:30:37

ஊட்டி: ஊட்டியில் இருந்து குன்னூர் நோக்கி மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த அரசு பஸ், 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 8 பேர் உயிரிழந்தனர். 27 பேர் படுகாயமடைந்தனர். ஊட்டியில் இருந்து நேற்று காலை 11.30 மணியளவில் குன்னூர் நோக்கி ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் ராஜ்குமார் (38) ஓட்டினார். இதில், டிரைவர், கண்டக்டர் உட்பட 35 பேர் இருந்தனர். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. மந்தாடா அருகே சென்றபோது, முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், பள்ளத்தில் பாய்ந்தது. சுமார் 200 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்து, சுக்கு நூறாக நொறுங்கியது. பஸ்சின் கூரை தனியாக ஒரு இடத்தில் விழுந்தது. பல இருக்கைகளும் ஆங்காங்கே சிதறின. பஸ்சுக்குள் இருந்த பயணிகள் அலறித்துடித்தனர். பலர் தூக்கி வீசப்பட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த பொதுமக்கள், உடனடியாக சென்று காயமடைந்தவர்களை மீட்டனர். 2 பெண்கள், ஒரு ஆண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்கள், இறந்தவர்கள் அனைவரையும் உடனடியாக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே 4 பேர் இறந்தனர். படுகாயம் அடைந்த 19 பேர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ஒருவர் இறந்தார். இறந்தவர்கள் விவரம் வருமாறு: 1. ஊட்டியை சேர்ந்த ஜீவானந்தம் என்பவரின் மனைவி சாந்தகுமாரி (55), 2. பேலிதளாவை சேர்ந்த தருமன்(64), 3. குன்னூரை சேர்ந்த தினேஷ்(30), 4. ஊட்டியை சேர்ந்த நந்தகுமார்(36), 5. கொலக்கொம்பையை சேர்ந்த பிரபாகரன்(55), 6. பெங்களூரை சேர்ந்த பவர்லால் என்பவரின் மனைவி ஜெய(49), 7. ஊட்டி காந்தலை சேர்ந்த அல்மஸ் (29), மூர்த்தி(47) என 8 ேபர். 27 பேர் காயமமடைந்தனர்.

கார் மரத்தில் மோதி 4 பேர் பலி: கரூர் அடுத்த தாந்தோணிமலை வாஞ்சிநாதன் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (63). ஓய்வுபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அலுவலர். இவரது மனைவி கிரேஸ்ஜெயலட்சுமி (55). இவரது தங்கை சுப்புலட்சுமி (52). மூவரும் தாராபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு காரில் நேற்று காலை புறப்பட்டனர். காரை டிரைவர் முனியாண்டி (60) என்பவர் ஓட்டினார். சின்னதாராபுரம் அருகில் மதியம் 1 மணியளவில் சென்றபோது, கார் எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதியது. இதில் செல்வராஜ், டிரைவர் முனியாண்டி ஆகிய இருவரும் சம்பவ இடத்தில் இறந்தனர். படுகாயமடைந்த கிரேஸ்ஜெயலட்சுமி, சுப்புலட்சுமி ஆகியோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். இதுகுறித்து சின்னதாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் சிக்குவது அரசு பஸ்கள்தான்...

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை நடந்த விபத்துகளில் பெரிய அளவிலான விபத்துக்கள் அனைத்தும் அரசு பஸ்களால்தான் நிகழ்ந்துள்ளன. கடந்த 2000ம் ஆண்டில் அரசு பஸ் கைகாட்டி - தேவர்சோலைக்கு இடையே 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். கடந்த 2008ல் மசினகுடி சென்று கொண்டிருந்த அரசு பஸ் கல்லட்டி மலைப் பாதையில் விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர். நேற்று அரசு பஸ் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • modi68bday

  வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

 • losangeleswaterlight

  லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

 • vinayagarsilai

  சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

 • mankutstromchina

  தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

 • tirupathififth

  திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்