SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கபினி அணையில் இருந்து 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு திறப்பு

2018-06-15@ 01:30:06

பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி டெல்டா பகுதிகளில் மழை பெய்து  வருவதால் நிரம்பியுள்ள கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு  வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பல மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. பெங்களூரு, கோலார், சிக்கபள்ளாபுரா மாவட்டங்களில் பலத்த மழை பெய்வதால், தமிழகத்தில் ஒசூர், கிருஷ்ணகிரியில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து  அதிகரித்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருவதால்  கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணையில் நேற்று மாலை நிலவரப்படி  92.18 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு விநாடிக்கு 28 ஆயிரத்து 383 கனஅடி  தண்ணீர் வருகிறது. பாசனத்துக்காக 394 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மைசூரு  மாவட்டத்தில் உள்ள  கபினி அணையில் 2,280 (கடல் மட்டத்தில் இருந்து)  அடிக்கு தண்ணீர் உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 2,284 அடியாகும். கேரள  மாநிலம் வயநாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக இந்த அணைக்கு நீர்வரத்து  அதிகரித்துள்ளது. தற்போது, விநாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீர்  வருகிறது. அணையில் இருந்து விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர்  தமிழகத்துக்கு திறக்கப்பட்டுள்ளது. இன்று  அணை முழுமையாக நிரம்பிவிடும்.  அதன் பிறகு வரும் நீர்வரத்து முழுவதும் தமிழகத்துக்கு திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குடகு மாவட்டத்தில் கடந்த  ஒரு வாரமாக பெய்து வரும் பலத்த மழையால்,  ஹாரங்கி, ஹேமாவதி அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-06-2018

    24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • kmkharippastatue

    சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

  • Stalinarrestvolunteersstirstir

    தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

  • president_kovindh_cuba123

    கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்