SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.55 கோடி மோசடி சகோதரர் உட்பட மூவர் கைது

2018-06-15@ 01:30:05

சென்னை: திருவள்ளூர் அருகே கோரமங்கலம் கிராமத்தில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.55 கோடி மோசடி செய்த சகோதரர்கள் உட்பட மூவரை, திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த கோரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் (44). இவரும், இவரது தம்பி ருக்மாங்கதன் (36), சென்னை திருமுல்லைவாயல் ஜெயலட்சுமி நகரை சேர்ந்த தாமோதரன் மாமனார் வெங்கடராஜ் (62) ஆகிய மூவரும் சேர்ந்து, கடந்த 2015ம் ஆண்டு முதல் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர்.இவர்களிடம், அதே பகுதியை சேர்ந்த முனுசாமி ராஜி என்பவர், 2015 முதல் 2017 வரை ₹1 லட்சம் சீட்டில் 6 சீட்டில் சேர்ந்து மொத்தம் 3,30,196 பணம் கட்டியுள்ளார். இவரைப் போலவே அதே கிராமத்தை சேர்ந்ந்த கிருஷ்ணவேணி, கன்னையா, ஹேமாவதி, பெருமாள், ராணி, ஜோதி, சுந்தரம்மாள், மங்கம்மாள், ஜானகி, கன்னியம்மாள் உட்பட 80க்கும் மேற்பட்டோர் 1 கோடியே 54 லட்சத்து, 70 ஆயிரத்து 531 சீட்டு பணம் கட்டியுள்ளனர்.

இப்பணத்தை திருப்பித் தராமல் அவர்கள் மூவரும் மோசடி செய்து ஏமாற்றிவிட்டு தலைமறைவாக இருந்தனர். இதுகுறித்து ஏலச்சீட்டு நடத்தி ஏமாந்தவர்கள் நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., சிபிசக்கரவர்த்தியிடம் புகார் கொடுத்தனர். மனுமீது நடவடிக்கை எடுக்குமாறு அவர் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணப்பனுக்கு உத்தரவிட்டார்.இதையடுத்து, இன்ஸ்பெக்டர் அனுமந்தன் வழக்குப்பதிந்து, தலைமறைவாக இருந்த கோரமங்கலம் தாமோதரன், அவரது தம்பி ருக்மாங்கதன், மாமனார் வெங்கடராஜ் ஆகிய மூவரையும் நேற்று முன்தினம் இரவு கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CanadaSyrianChildren

    கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி

  • DroneLanternChina

    ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது

  • AttukalPongalaKerala

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்