SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கு குறுகிய கால அவகாசத்துக்குள் முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

2018-06-15@ 01:29:27

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: அதிமுக அரசு நீடிக்க முடியுமா, முடியாதா என்ற முக்கியமான கேள்வி எம்எல்ஏக்கள் பதவி நீக்கம் தொடர்பான இவ்வழக்கின் தீர்ப்பை பொறுத்தே உள்ளது. இதுபோன்ற முக்கிய அரசியல் பிரச்னைகளில் பல மாதங்கள் இழுத்தடித்து தீர்ப்பு வழங்குவது பொருத்தமானது அல்ல. மேலும், 18 தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களுடைய அடிப்படை உரிமைகளை நிராகரிப்பதாக அமையும்.இது ஜனநாயகத்துக்கு எதிரானதும் கூட. 9 மாதங்களுக்கு மேல் காலம் கடந்து விட்ட இப்பிரச்னையில் 3வது நீதிபதி மேலும் காலம் கடத்தாமல் ஒரு குறுகிய கால அவகாசத்துக்குள் வழக்கை முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_protest123

    நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

  • cleanesttrainPurityIndia

    ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

  • whatsapp_police11

    வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்