SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஸ்டெர்லைட் மூடல் பற்றி கொள்கை முடிவு தேவை: அன்புமணி அறிக்கை

2018-06-15@ 01:29:00

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை மூடல் குறித்த கொள்கை முடிவு தேவை என  பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணை மிகவும் பலவீனமானது என்பது தமிழக ஆட்சியாளர்களுக்கும் நன்றாகத் தெரியும். அதை பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டிய போதிலும், அதை ஆட்சியாளர்கள் நியாயப்படுத்தினார்கள். அமைச்சரவையில் இன்னொரு அமைச்சரோ, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணை உலக நீதிமன்றத்திலும் செல்லுபடியாகும் என்று கூறினார். இவ்வளவையும் கூறிவிட்டு, ஸ்டெர்லைட் ஆலை மூடல் ஆணையை எதிர்த்து ஆலை நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டால் தங்களிடம் கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்தது தமிழக அரசு.
அரசாணை மீது நம்பிக்கை இருந்தால் கேவியட் மனு தாக்கல் செய்வது ஏன்? என்ற வினாவுக்கு ஆட்சியாளர்களிடமிருந்து இன்று வரை பதில் வரவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பது தமிழக ஆட்சியாளர்களின் நோக்கம் இல்லை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட நிலையில், அதனால் மக்களிடையே ஏற்பட்ட கோபத்தை குறைப்பதற்கான தற்காலிக நடவடிக்கையாகவே ஆலை மூடல் நாடகத்தை தமிழக அரசு நடத்தியிருக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி தமிழகத்தில் தாமிர உருக்காலைகளுக்கு அனுமதி இல்லை என்று கொள்கை முடிவு எடுக்க வேண்டும். அதனடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையை புதிதாக வெளியிட வேண்டும். ஆலை ஊழியர்களுக்கு நிர்வாகத்திடம் இருந்து இழப்பீடு பெற்றுத் தருவதுடன், அவர்களின் மாற்று வேலைக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்