பணியின்போது விபத்தில் உயிரிழந்த 2 காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் காப்பீடு தொகை
2018-06-15@ 01:28:47

சென்னை: பணியின்போது விபத்தில் உயிரிழந்த 2 காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் இழப்பு காப்பீட்டு தொகையை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று வழங்கினார். தமிழக காவல் துறையில் பணிபுரியும் காவலர்களின் ஊதியம் கடந்த 15 வருடங்களாக, வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு, ஆக்சிஸ், எச்.டி.எப்.சி மற்றும் பாரத ஸ்டேட் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள காவலர்களுக்கு பல்வேறு காப்பீட்டு சலுகைகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் சென்னை மாநகர காவல் துறையில் பணிபுரிந்து வந்த ஆயுதப்படை காவலர் முரளிகுமார் (26) கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் தேதி வாகன விபத்தில் உயிரிழந்தார். இவர், ஆக்சிஸ் வங்கியில் கணக்கு வைத்து இருந்தார்.
அதைப் போன்று காவல் துறை கூடுதல் இயக்குநர், தொழில் நுட்ப பிரிவு தேனி மாவட்டம் தனிப்பிரிவில் பணிபுரிந்து வந்த தொழில்நுட்ப உதவி ஆய்வாளர் கோபி கண்ணன் கடந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி வாகன விபத்தில் உயிரிழந்தார். இவரும் ஆக்சிஸ் வங்கியில் சம்பள கணக்கு வைத்திருந்தனர். ஆகையால் 2 பேரும் ஆக்சிஸ் வங்கியில் தங்களது சம்பள கணக்கை வைத்திருந்ததால், அவர்களுக்கு விபத்து காப்பீடு தொகை அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, ஆக்சிஸ் வங்கி அதிகாரிகளான நிதி அரோரா, அரிக்குமார் நேற்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து விபத்து காப்பீட்டுக்கான காசோலையை வழங்கினர். பின்னர் போலீஸ் கமிஷனர் விபத்தில் உயிரிழந்த முரளிகுமாரின் தாயார் சரஸ்வதி மற்றும் உதவி ஆய்வாளர் கோபிகண்ணனின் மனைவி மோகனப்பிரியா ஆகியோரிடம் காப்பீடு தொகையான தலா 30 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
மேலும் செய்திகள்
போட்டி தேர்வுக்கு தயாராக புதிய வலைதளம்
கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனருக்கு விருது
கம்பெனி அலுவலகத்தில் தீ விபத்து
மத நம்பிக்கைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது கருத்து சுதந்திரம் சவாலை எதிர்கொள்கிறது : சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
அரசு வேலை பெற பணம் கொடுத்தாலும் நடவடிக்கை : பொது அறிவிப்பு வெளியிட டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு
மாற்றுத்திறனாளிகளுக்கு நகரும் வண்டி முதல்வர் எடப்பாடி வழங்கினார்