SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

வரும் 18, 19ம் தேதிகளில் பிளஸ் 1 தேர்வுக்கு தட்கலில் விண்ணப்பிக்கலாம்

2018-06-15@ 01:28:27

சென்னை: பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு துணைத் தேர்வுக்கு 18 மற்றும் 19ம் தேதிகளில்  தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பிளஸ் 1 தேர்வில் கடந்த மார்ச் மாதம் நடந்த ஓரிரு பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்களுக்காக ஜூன், ஜூலை மாதங்களில் சிறப்பு துணைத் தேர்வு நடக்கிறது. தட்கலில் விண்ணப்பிக்கும் மாணவ மாணவியருக்கு திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, கடலூர், வேலூர், சென்னையில் மட்டுமே தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தட்கல் திட்டத்தின் கீழ் தேர்வு எழுத விரும்புவோர் அந்தந்த மாவட்டத்தில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்தில் 18, 19ம் தேதிகளில் பதிவு செய்து கொள்ள வேண்டும். தட்கலில் பதிவு செய்வோர் ஒரு பாடத்துக்கு 50, இதரக் கட்டணம் 35 மற்றும் தட்கல் அனுமதி கட்டணமாக 1000 சேர்த்து செலுத்த வேண்டும். இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்