SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கோர்ட்டில் ஆஜராக வந்த பிரபல ரவுடியை கொல்ல முயற்சி : 2 பேர் கைது

2018-06-15@ 01:27:37

பாரிமுனை: பிரபல ரவுடியை கொலை செய்ய முயன்ற 2 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் சரவணன் (எ) பாம் சரவணன் (45). இவர் மீது கொலை, கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து, பாம் வீசி கொலை செய்வது உள்பட பல்வேறு வழக்குகள் பல காவல் நிலையங்களில் உள்ளன. கடந்த 2015ம் ஆண்டு, இவரது தம்பி தென்னரசுவை தூத்துக்குடியில் வெட்டி கொலை செய்தனர். அந்த வழக்கில் தொடர்புடைய செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த ஜெயசீலன் என்பவரை, கடந்த 2016ம் ஆண்டு பாம் வீசி, சரவணன் கொலை செய்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், சில நாட்களில் ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர், கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். அவரை பிடிக்க போலீசாருக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த மாதம், மாதவரம் பகுதியில் பதுங்கி இருந்த பாம் சரவணனை, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இந்நிலையில், சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாம் சரவணனை ஆஜர்படுத்த, நேற்று போலீசார் அழைத்து வந்தனர். அப்போது, சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த 2 பேரை, போலீசார் மடக்கி பிடித்தனர். இதை பார்த்ததும், அவர்களுடன் இருந்த 4 பேர் தப்பிவிட்டனர். போலீசார், அவர்களை சோதனை செய்தபோது கத்தி, அரிவாள், நாட்டு வெடிகுண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில், புளியந்தோப்பு சுந்தரபுரம் 2வது தெருவை சேர்ந்த இளவரசன் (33), கன்னிகாபுரம் தாஸ் நகரை சேர்ந்த ஜெயராஜ் (21) என்றும், தப்பியோடிய 4 பேர் மதன் (28), மகேஷ் (27), அபினேஷ் (26), ஜெயசீலன் (29) எனவும் தெரிந்தது. மேலும், பிடிபட்டவர்கள் ஜெயசீலனை கொலை செய்ததற்காக பழிக்குப்பழி தீர்க்க பாம் சரவணன் மற்றும் அவரது தம்பி மாரி ஆகியோரை கொலை செய்ய வந்தது தெரிந்தது.  இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய 4 பேரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்