SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாம்பரம் - கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்

2018-06-15@ 01:27:23

சென்னை: சென்னை தாம்பரம் - கொச்சுவேலி இடையே ஜூன் 19ம் தேதி கூடுதல் கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: தாம்பரம் கொச்சுவேலி இடையே கூடுதல் கட்டண சிறப்பு ரயில் (ரயில் எண்:06039) இரவு 10.20 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 2.40 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். இந்த ரயில் சென்னை, திருச்சி, மதுரை, நாகர்கோவில் மார்க்கத்தில் செல்லும். நாளை, நாளை மறுதினம் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய, சென்னைக்கு வந்து சேர வேண்டிய சில ரயில்கள் காலதாமதாக செல்லும்.நெல்லூர்- சூலூர்பேட்டை (ரயில் எண்: 66030) இடையிலான பயணிகள் ரயில் நெல்லூரில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு செல்ல வேண்டியது ஒன்றரை மணி நேரம் தாமதமாக காலை 11.30 மணிக்கு புறப்படும்.

சூலூர்பேட்டை- சென்னை சென்ட்ரல் இடையிலான பயணிகள் ரயில் (ரயில் எண்: 66026) சூலூர் பேட்டையில் இருந்து பகல் 12 மணிக்கு புறப்பட்டு செல்ல வேண்டியது ஒன்றரை மணி நேரம் தாமதமாக பகல் 1.30 மணிக்கு புறப்படும். விஜயவாடா- சென்னை சென்ட்ரல் பினாகினி எக்ஸ்பிரஸ் (ரயில் எண் : 12711) ஒரு மணி நேரம் 20 மணி நிமிடங்கள் தாமதமாக வந்தடையும். சென்னை சென்ட்ரல்- விஜயவாடா பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண்: 12712) சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 2.05 மணிக்கு புறப்பட வேண்டியது 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு செல்லும். இவ்வாறு தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_protest123

    நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

  • cleanesttrainPurityIndia

    ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

  • whatsapp_police11

    வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்