SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆணழகன் போட்டியில் பங்கேற்க முடியாததால் வாலிபர் தற்கொலை

2018-06-15@ 01:26:56

சென்னை: அண்ணனூரில், ‘‘மிஸ்டர் இந்தியா’’ ஆணழகன் போட்டியில் பங்கேற்க முடியாத விரக்தியில், வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். ஆவடி, அண்ணணூர், கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (22). மதுரவாயல் தனியார் பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரி. சந்தோஷ்குமாருக்கு ஒரு பாடத்தில் அரியர் உள்ளது. இதற்கிடையில், கடந்த ஆண்டு நடந்த தமிழக அளவிலான ஆணழகன் போட்டியில் பங்கேற்று, வெற்றி பெற்றார். இதையடுத்து, ‘‘மிஸ்டர் இந்தியா’’ பட்டம் பெற பல்கலைக்கழகத்தின் மூலம் சந்தோஷ்குமார் முயற்சி எடுத்து வந்தார். இந்நிலையில், சந்தோஷ்குமார் தோல்வி அடைந்த ஒரு பாடத்தை எழுதி முடித்து, ‘‘மிஸ்டர் இந்தியா’’ போட்டிக்கு செல்வதற்குள் 23 வயதாகிவிடும் என்பதால், அவரால் போட்டியில் பங்கேற்க முடியாது. இதனால் சந்தோஷ்குமார் கடந்த சில தினங்களாக மனம் உடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சந்தோஷ்குமார் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதைப்பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். தகவலறிந்து திருமுல்லைவாயல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு, அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-06-2018

    24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • kmkharippastatue

    சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

  • Stalinarrestvolunteersstirstir

    தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

  • president_kovindh_cuba123

    கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்