SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

திரைப்பட தயாரிப்பாளர் கார் கடத்தல்

2018-06-15@ 01:26:47

பூந்தமல்லி: சினிமா தயாரிப்பாளர் காரை கடத்தி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். பூந்தமல்லி அடுத்த வேலப்பன்சாவடியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (70). தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் திரைப்படம் தயாரித்து வருகிறார். இவரிடம் கார் டிரைவராக வேலை பார்த்து வருபவர் சந்திரன் (24). நேற்று முன்தனிம் இரவு ராமச்சந்திரனின் உறவினர்கள் ரயில் மூலம் சென்ட்ரலுக்கு வருவதாக இருந்தனர். அதனால், சந்திரனை அனுப்பி உறவினர்களை அழைத்து வரும்படி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

இதையடுத்து, காரை எடுத்து கொண்டு சந்திரன் புறப்பட்டார். சிறிது தூரம் சென்றதும், 5 பேர் கும்பல், சந்திரனை வழிமறித்து, ‘‘நசரத்பேட்டைக்கு எப்படி செல்ல வேண்டும்’’ என்று கேட்டுள்ளனார். சந்திரன், பதில் சொல்லி கொண்டிருந்த நேரத்தில், அந்த கும்பல், திடீரென கத்தியை காட்டி மிரட்டி சந்திரனை தாக்கினர்.
பின்னர் அவரை கீழே இழுத்து வெளியே போட்டு விட்டு, காரை கடத்தி சென்றனர். புகாரின்பேரில் திருவேற்காடு வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்