10 லட்சம் தங்கம் பறிமுதல்
2018-06-15@ 01:25:33

சென்னை: கோலாலம்பூரில் இருந்து சூட்கேசில் மறைத்து வைத்து கடத்தி வந்த 10 லட்சம் தங்கத்தை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சென்னை யைச் சேர்ந்தவரை கைது செய்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சென்னை விமான நிலையத்துக்கு கோலாலம்பூரில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 11.50 மணிக்கு பாட்டியாக் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அதில் வந்த சென்னையை சேர்ந்த உசேன் (37) என்பவரின் டிராவல் சூட்கேசை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதன் கைப்பிடியை கழற்றியபோது, இருபுறமும் தங்கத்தை உருக்கி ராடுகளுக்கு பதிலாக 350 கிராம் தங்கத்தை வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதன் சர்வதேச மதிப்பு 10.7 லட்சம். இதையடுத்து அதிகாரிகள் தங்கத்தை கைப்பற்றியதுடன், உசேனை கைது செய்தனர். மேலும் அவரது பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது, உசேன் பலமுறை பல நாடுகளுக்கு சென்று வந்தது தெரிந்தது. இதனால் அவர், பலமுறை கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளாரா என அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து அதிகாரிகள் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த 3 மாத குழந்தை பலி : போதை ஆசாமியால் விபரீதம்
தொழிலதிபரிடம் ரூ.25 லட்சம் நகை கொள்ளை
கழுத்தை அறுத்த கைதிக்கு சிகிச்சை ... தண்டனை கைதிகளுக்கு ஷூக்கள் கிடைப்பது எப்படி? : உயர் அதிகாரிகள் விசாரணை
திருத்தணி அருகே டிக் டாக் வீடியோவால் இளைஞர் கழுத்தை நெரித்து கொலை
மெட்ரோ வாட்டர் ஒப்பந்தம் எடுப்பதில் அடிதடி: 6 பேர் கைது
உபி.யில் மாணவர்கள் போல் தங்கியிருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் கைது